Top
undefined
Begin typing your search above and press return to search.

குஜராத் கலவர வழக்குகளை கண்காணிப்பதை நிறுத்திய உச்ச நீதிமன்றம்

குஜராத் கலவர வழக்குகளை கண்காணிப்பதை நிறுத்திய உச்ச நீதிமன்றம்

By :

  |  31 Aug 2018 7:22 AM GMT

குஜராத் கலவர வழக்குகளை வேறு மாநிலத்திற்கு  மாற்றுவதற்காக 15 ஆண்டுகளுக்கு முன்பு NHRC தாக்கல் செய்த ஒரு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வை மற்றும் கண்காணிப்பின் கீழ் ஒன்பது முக்கிய கோத்ரா கலவர வழக்குகளை விசாரணை செய்ய சிறப்பு விசாரணை குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட வேண்டும் என்று 2008 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


ஜூலை 23 ம் தேதி வெளியிடப்பட்ட சமீபத்திய உத்தரவு, நரோடா கம் வழக்கு மற்றும் கோத்ர ஒன்பது வழக்குகள்  கடைசியாக விசாரிக்கப்பட்ட சிறப்பு கலவரம் நீதிமன்றத்தால் பெற்றது. சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்குகளை கண்கணிக்கப்போவதில்லை என்று கூறியது. எஸ்.ஐ.டி யை இந்த கண்காணிப்பை முடிவுக்கு கொண்டுவரும் படி கூறியது.


109-2003 மனுவை நிராகரித்த பின்னர், "அணைத்து உத்தரவுகளையும் ஆராய்ந்தபின், புதிய உத்தரவுகள் ஏதும் தேவையில்லை என்று நாங்கள் கருதுகிறோம்." இந்த நீதிமன்றத்தின் உதவி தேவைப்பட்டால், எந்த கட்சியும் IA (Interlocutory Application) தாக்கல் செய்ய அனுமதிக்கப்படும் ". என்று கூறியது.


குஜராத் உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முன்னாள் பா.ஜ.க மந்திரி மாயா கொத்னானி உட்பட 80 பேர் மீது எட்டு கலவர வழக்குகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story