Top
undefined
Begin typing your search above and press return to search.

கவர்ச்சியாக சித்தரிக்கப்பட்ட மரண ஓலம், இரத்த வெறி மற்றும் வஞ்சப்புகழ் - இடதுசாரி மற்றும் நக்சல்வாதிகளின் தேசவிரோத திட்டங்கள் எவ்வாறு அரங்கேற்றப்படுகிறது? #UrbanNaxals

கவர்ச்சியாக சித்தரிக்கப்பட்ட மரண ஓலம், இரத்த வெறி மற்றும் வஞ்சப்புகழ் - இடதுசாரி மற்றும் நக்சல்வாதிகளின் தேசவிரோத திட்டங்கள் எவ்வாறு அரங்கேற்றப்படுகிறது? #UrbanNaxals

By :

  |  30 Aug 2018 6:55 PM GMT


வரலாறு எப்பொழுதும் வெற்றியாளர்களால் தான் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போதைய காலங்கள் மாறிவிட்டன. வரலாற்றின் கருத்தையும் வெற்றி என்பதன் அர்த்தத்தையும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். இன்றைய சமுதாய - பொருளாதார முரண்பாடுகளில், வரலாற்றின் மறுசீரமைக்கப்பட்ட ஒரு கருவியாக கல்வி மற்றும் ஊடகத்துறை மாறியுள்ளது.

ஒரு சமுதாயமாக நாம் கல்விக்கு கடுமையான முக்கியத்துவம் கொடுக்கிறோம். அது நமது நாகரிகத்தின் மூலதனங்களில் ஒன்றாகும். அலங்கார கல்வி பின்னணி கொண்ட ஒரு நபர் படித்து அல்லது அவர் கூற கேட்கும் போதெல்லாம், நாம் அவரின் கூற்றுக்களை சரிபார்க்க அல்லது மறுக்க வேண்டிய அவசியத்தை  ஒருபோதும் உணர்வதில்லை.


'அறிவுஜீவிகள்' என்ற போர்வையில் இருப்பவர்களை கேள்வி கேட்கும் நடைமுறை கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போனது. இளைஞர்களை பகுத்தறிவு என்ற பெயரில் அவர்களுக்குத் அறிவை மற்றும் தகவல்களை தரும் நிறுவனங்களாக ஊடகங்கள் மற்றும் கல்வியாளர்கள் இருக்கிறார்கள்.


கடந்த காலத்தில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று குவித்த இடதுசாரிகளின் இயக்கங்களை பற்றி பேச்சுக்கள் வரும் போது இந்த நிகழ்வு பல மடங்கு அதிகரிக்கிறது. 'அறிவுஜீவிகள்', இதுபோன்ற கொடூரமான இயக்கங்களை மிகவும் நுட்பமான, கணிசமான முறையில் சிறப்பாக, கவர்ச்சியாக சித்தரித்துதக் காட்ட முயன்று வெற்றி அடைந்து இருக்கிறார்கள் இன்றும் முயல்கிறார்கள் வெற்றி அடைந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.


"1917 புரட்சி" என்று இந்தியாவில் பெரிதாக கொண்டாடப்படும் புரட்சி, பாட்டாளி வர்க்கத்திற்கு பெரும் வெற்றியாக சித்தரிக்கப்பட்டது. ஆனால் ரஷ்யாவை ஆட்சி செய்த சில நூற்றுக்கனக்கான போல்ஷிவிக்குகளின் சிறிய முயற்சி தான் அது.


'பெட்ரோகிராட்' நகரத்தில் அரசாங்க அலுவலகங்களைக் கையகப்படுத்திய பின்னர், சோவியத்தில் பெரும்பான்மை பெற்ற இடதுசாரிகளுடன் கூட்டணியில் சேர்ந்தனர், போல்ஷிவிக்குகள். இடதுசாரி சோசியலிச புரட்சியாளர்கள் போல்ஷிவிக்குகளுக்கு, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடத்துவதாக வாக்குறுதி அளித்து மிக அரிதாகவே வெற்றி பெற்றனர்.முரண்பாடாக, எதிர்பார்த்தபடி போல்ஷிவிக்குகள் அடுத்தடுத்த தேர்தல்களில் 24 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று மிக மோசமாக தோல்வியுற்றனர். பொதுவான கம்யூனிச சிந்தனையின் மூலம், லெனின், ஜனநாயக முறையில் தேர்ந்துடுக்கப்பட்ட சட்டமன்றத்தை கவிழ்ப்பதற்கு தனது "சிவப்புக் காவலர்"களுக்கு (தனது சொந்த இராணுவம்) உத்தரவிட்டார். தொடர்ந்து, தன்னை சர்வாதிகாரியாக நிறுவிக்கொண்ட லெனின், சிவப்பு மற்றும் வெள்ளை கம்யூனிஸ்டுகளுக்கு இடையேயான உள்நாட்டு யுத்தத்திற்கு கட்டாயப்படுத்தினார்.


எக்ஸ்பிரஸ் ட்ரிபியூனளின் ஒரு கட்டுரையாளரின் சிறந்த வரிகள் இவை:"கம்யூனிசத்தின் துணிச்சலான புரட்சியின் உருவமாக இருந்த இரத்தம் தவிர, இந்த புதிய உலகில் எல்லாமே குறைவாக தான் இருந்தது.  1918 இல், ஐந்து குழந்தைகள் உட்பட ராஜ குடும்பத்தில் அனைவரும், எக்கடடின்பர்க் கட்டிடத்தின் அடித்தளத்தில் கொலை  செய்யப்பட்டனர். 1917-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ஒடுக்குமுறை, இரத்தம், துன்பம் ஆகியவை தான் காணப்பட்டது",என்று அந்த கட்டுரையில் விளக்கப்பட்டிருக்கிறது.


இப்போது, ​​நம்மில் பெரும்பாலானவர்கள் புரட்சியின் இந்த அம்சத்தைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை, ஏனெனில் இடதுசாரிகள் 'அறிவுஜீவிகள்' என்ற புனைப்பெயரில் யதார்த்தத்தின் ஒரு கற்பனையை கலை நயத்துடன் காண்பிக்க முடிவு செய்தனர்.


புரட்சியின் ஆரம்பத்தில் உறுதியான ஆதரவாளர்களாக இருந்த க்ரான்ஸ்டாட் கடற்படை தளத்தின் மாலுமிகள், ஒரே நாளில் "தேசியவாத துணைப்படை" மற்றும் "கருப்பு நூற்றுக்கணக்கானவர்கள்" (‘nationalist paramilitary’ and ‘black hundreds’) ஆனார்கள் என்பதை அவர்கள் பேசவில்லை. சிவப்பு காவலர்கள் இந்த மாலுமிகளில் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றதோடு, சிறையில் அடைத்ததையும் பற்றி அவர்கள் பேசவில்லை. இந்த பகுதியளவு நினைவுச்சின்னம் அரிதானது அல்ல. அதே போல் இடது தூண்டுதல் படுகொலைகள் உலகம் முழுவதும் காணப்படுகிறது.


நக்சல்வாதி இயக்கத்தின் பயங்கரமான சரித்திரமானது கவிதைகள், புத்தகங்கள், கட்டுரைகள் ஆகியவற்றின் மூலம் மிதமிஞ்சிய முறையில் கவர்ச்சியாக சித்தரிக்கப்பட்டது. கவர்ச்சி பகுதிகளை நீக்கி பார்த்தால், இந்த இயக்கம் ஆயிரக்கணக்கான இளைஞர்களைக் கொன்ற ஒரு பயங்கரவாத பிரிவினைவாத இயக்கம் ஆகும்.

ஆரம்ப நாட்களில் இருந்து சீனாவின் தொடர்பு மற்றும் செல்வாக்கு இந்த இயக்கத்துக்கு வெளிப்படையாகவே இருந்தது. முக்கிய கருத்தியவாதிகளான சாரு மஜூம்தர் மற்றும் கனு சன்யால் ஆகியோர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான மாவோ சேதுங் அவர்களின் கருத்தியல் சார்பை வெளிப்படையாகவே தெரிவித்தனர்.

ஏப்ரல் 1967-ல், சாரு மஜூம்தர், கால்பங்கில் உள்ள தனது நேபாள தோழர் கிருஷ்ணபக்தா சர்மா அவர்களை சந்திக்க எட்டு ஆவணங்களை கொண்டு சென்றார். இந்த ஆவணங்கள் மூலம்  'திட்டமிட்ட புரட்சியின் வழிகாட்டுதல்களை' (guiding principles of the planned revolution)  சீனாவுக்குக் கொண்டு செல்லபட்டதாக நம்பப்படுகிறது. 52 நாட்கள் பயணம் செய்த பிறகு, ஷர்மா CPC(சீன கம்யூனிஸ்ட் கட்சி) அலுவலகத்தை அடைந்தார். மாவோவால் கையெழுத்திட்ட 'சிவப்பு நூலை' அவர் கொண்டு வந்தார்.


ஜூலை 5, 1967 பதிப்பில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிக்கையான 'பீபுல்ஸ் டெய்லி' வெளியிட்ட இதழில், மஜூம்தர் உருவாக்கிய 'புரட்சியாளர்கள்' குழுவிற்கு தங்கள் ஆதரவை வெளிப்படையாக வழங்குவதற்காக "ஸ்பிரிங் தண்டர் ஓவர் இந்தியா" ("Spring Thunder Over India") என்ற தலைப்பில் வெளி வந்தது புகழ்மிக்க கட்டுரை. அந்தக் கட்டுரையில் பின்னிப்பிணைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் உட்பிளவு மற்றும் கம்யூனிஸ்டுகளின் பழைய பாரம்பரியத்தைப் போலவே, இந்த சண்டை இறுதியில் சீன மற்றும் இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு இடையில் பரிமாறப்பட்டு இளைஞர்களை பலிகாடாக்கும் நோக்கம் கொண்டதாக இருந்தது.


கட்டுரை கூறியது:"வசந்தமான இடி ஒன்று இந்தியாவின் நிலப்பகுதி மீது மோதியுள்ளது. டார்ஜிலிங் பகுதியில் உள்ள புரட்சியாளர்கள் கிளர்ச்சியில் குதித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிகர குழு தலைமையின் கீழ், இந்தியாவில் கிராமப்புற புரட்சிகர ஆயுத போராட்டத்தின் மூலமாக சிவப்பு பகுதி நிறுவப்பட்டுள்ளது. இது இந்திய மக்களின் புரட்சிகர போராட்டத்திற்கு மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். "இந்தியாவின் பிரிவினைவாத கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளே உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு இடையிலான உள் பிளவை விளக்குகிறது இந்த கட்டுரை,"இந்திய பிற்போக்குவாதிகள் டார்ஜீலிங்கில் கிராமப்புற ஆயுத போராட்டத்தின் எழுச்சியால் பீதியடைந்துள்ளனர். அவர்கள் ஒரு பேரழிவை உணர்ந்துள்ளனர். டார்ஜிலிங் போராட்டகாரர்களின் கிளர்ச்சி "ஒரு தேசிய பேரழிவாகிவிடும்" என்ற அச்சத்தில் புலம்புகிறார்கள். ஏகாதிபத்தியம் மற்றும் இந்திய பிற்போக்குவாதிகள் டார்ஜீலிங் போராட்டகாரர்களின் இந்த ஆயுத போராட்டத்தை நசுக்குவதற்கு ஆயிரம் வழிகளில் முயற்சி செய்கின்றனர்.


டார்ஜீலிங்கில் புரட்சியை அடக்குவதில் பிற்போக்குத்தனமான இந்திய அரசாங்கத்துடன் மேற்கு வங்கத்தில் "காங்கிரஸ் அல்லாத அரசாங்கம்" வெளிப்படையாகக் கை கோர்த்து கொண்டது. இந்த மறுமலர்ச்சிக் குழுக்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் சோவியத்தாலும் இயங்குகின்றன என்பதற்கான கூடுதல் ஆதாரத்தை இது வழங்குகிறது. "காங்கிரஸ் அல்லாத அரசாங்கம்" என்று அழைக்கப்படுபவர்கள் நில உரிமையாளர்கள் மற்றும் முதலாளித்துவத்தின் ஒரு கருவி மட்டுமே."
நக்சலைட்டுகள் சேர்த்து ஒரு கட்சியை உருவாக்கிய பின்னர், CPI(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) ஏப்ரல் 1969-இல் பெயரிடப்பட்ட பிறகு, இந்த அமைப்பின் நடவடிக்கைகள் மிகவும் ஒருங்கிணைந்தன. அவர்கள் கொல்கத்தாவில் கல்வி கற்ற இளைஞர்களை இலக்காகக் கொண்டனர். அவர்கள் மஜூம்தாரால் எழுதப்பட்ட கட்டுரைகளை எடுத்துக் கொண்ட 'Liberation' என்ற மாதாந்திர வெளியீட்டை வெளியிட்டனர்.


செப்டம்பர் 18, 1969-இல் கொல்கத்தா காவல்துறை கெஸெட்டில் அறிவிக்கப்பட்டதன் மூலம், கொல்கத்தா காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது அந்த வெளியீடுகள். கொல்கத்தாவின் தெருக்களிளும், சுவர்களிளும் மாவோவை மக்கள் தலைவராக சித்தரிக்கப்பட்டு விளம்பரங்கள் செய்யப்பட்டன.


1970 மே மாதம் தங்கள் முதல் மாநாட்டில் CPI(M-L)  கட்சி அதன் ஆதரவாளர்களை கூட்டி காவல்துறை மீது தாக்குதல் நடத்தவும் அவர்களின் ஆயுதங்களை கைப்பற்றவும் அழைப்பு விடுத்தது. இதனைத் தொடர்ந்து 1970 அக்டோபர் இறுதியில், நக்சலைட்டுகளால் நடத்தப்பட்ட நகர்ப்புற நடவடிக்கைகளில் குறைந்தபட்சம் இருபத்தி ஐந்து காவல்துறையினர் கொல்லப்பட்டனர் மற்றும் முன்னூற்று ஐம்பது பேர் காயமுற்றனர்.


நக்சல் நடவடிக்கைகள் ஆபத்தான நிலைக்கு சென்றதை அடுத்து, 22 அக்டோபர் 1970-இல் கொல்கத்தா காவல்துறையின் அப்போதைய காவல் ஆணையர் ஆர்.கே.குப்தா ஒரு உத்தரவை வெளியிட்டார்."சினிமாக்கள், திரையரங்குகளில் காவல் அலுவலர்கள் கணிசமான நேரத்தை செலவழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டும். இது சம்பந்தமாக குடும்ப உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டாலும் கூட, அவர்கள் அத்தகைய எளிமையான ஆசைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும் .... "கொல்கத்தாவின் முழு நகரமும் போர்-மண்டலமாக மாற்றப்பட்டது. இறுதியில், 1972-ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று கொல்கத்தா காவல்துறையால் கைது செய்யப்பட்ட சாரு, ஜூலை 28, 1972 அன்று மாரடைப்பால் இறந்தார்.


சாருவின் புகழ்பெற்ற வாக்கியம்:"வர்க்கப் பகைவரின் இரத்தத்தில் தனது கைகளை நிரப்பாதவர் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் அல்ல"ஆயுதப் புரட்சியின் கனவு மற்றும் அரசை கவிழ்க்க வேண்டும் என்ற கம்யூனிஸ்ட் சிந்தனை இந்தியாவில் சாத்தியப்படவில்லை. இந்திய துணை கண்டத்தில் தங்கள் சொந்த கொள்கைகளை சீனர்கள் புகுட்டுவதற்கு ஆரம்பத்திலிருந்தே இந்தத் தலைவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள் என்றும் கூறலாம்.


உண்மையான சோகம் யாதெனில் இளைஞர்களின் இழப்பு தான். கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கம்யூனிஸ்ட் அணிகளில் இணைந்தனர். துண்டு பிரசுரங்கள் மற்றும் புரட்சியின் ரகசியமயமாக்கல் மூலம் மூளை சலவை செய்யப்பட்டனர்.


வரலாற்று ஆசிரியரான திலீப் சிமியோனின் அறிக்கையில் காணக்கூடிய குறிப்பு :"வியட்நாமில் தேசிய விடுதலை முன்னணியின் டெட் தாக்குதல், பிரான்சில் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மே எழுச்சியைத் தூண்டியது, மார்டின் லூதர் கிங் படுகொலை, சீனாவில் கலாச்சார புரட்சி, அமெரிக்க விளையாட்டு வீரர்களால் மெக்ஸிகோ ஒலிம்பிக்கில் நிகழ்த்தப்பட்ட பிளாக் பவர் வணக்கம் ஆகிய அனைத்தும் நடந்தது தான் 1968"இன்று வரை, கம்யூனிஸ்ட் சிந்தனைகள் இன்னமும் அரசு எதிர்ப்பு உணர்வுகளைத் தாங்கி வாழும் மக்களால் தான் உயிருடன் இருக்கின்றது. 'படித்த மனிதர்கள்' எப்போதுமே தேசத்துரோகம், மரணம், வருத்தத்தை ஏற்படுத்தும் இலக்கிய வடிவங்களின் ஆதரவைக் கொடுப்பதில் மகிவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இன்று நாம் பார்ப்பது அனைத்துமே கொல்கத்தாவில் வரையப்பட்ட சிவப்பு வண்ண பிரச்சாரத்தை மீண்டும் மீண்டும் நாடு முழுவதும் செய்வது தான். தற்போது #UrbanNaxals மூலம் மீண்டும் இதை இந்தியாவில் எங்கேனும் ஒரு பகுதியிலாவது நக்சல் ஆதிக்கத்தை, ஆட்சியை நிறுவ வேண்டும் என்று துடிதுடிக்கிறார்கள். நாம் கவனமாக இல்லாவிட்டால், 1969 திரும்பி விடும். எல்லாவற்றிற்கும் மேலாக, வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளாதவர்கள் அவர்கள் செய்த தவறை மீண்டும் செய்கிறார்கள்.Based on a Opinion from OpIndia.

Next Story