Top
undefined
Begin typing your search above and press return to search.

மு.க.ஸ்டாலின் தி.மு.க தலைவராக பொறுப்பேற்ற ஒரு வாரத்துக்குள் வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்துள்ள தி.மு.க-வினர், அதிர்ச்சியில் தமிழக மக்கள்!

மு.க.ஸ்டாலின் தி.மு.க தலைவராக பொறுப்பேற்ற ஒரு வாரத்துக்குள் வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்துள்ள தி.மு.க-வினர், அதிர்ச்சியில் தமிழக மக்கள்!

By :

  |  1 Sep 2018 4:09 AM GMT

கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார் மு.க.ஸ்டாலின். ஸ்டாலின் பெயரை 1307 பேர் தலைவராக முன்மொழிந்ததாக தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்தார்.
தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
மு.க.ஸ்டாலின் தலைவரனதற்கு அடுத்த நாளே(ஆகஸ்ட் 29) கன்னியாக்குமரியில் சுதா அமர்சிங் என்கின்ற தி.மு.க.வின் வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் நாகர்கோயில் அருகே  உள்ள மருங்கூரில் ஒரு ஓட்டலில் பரோட்டா சாப்பிட்டு முடித்து அவரிடம் பில் தரப்பட்டபோது பணம் தராமல், தி.மு.க பிரமுகர் சுதா அமர்சிங் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காண்பித்து ஓட்டல் ஊழியர்களை மிரட்டியுள்ளார். மேலும் ஓட்டலில் இருந்த பொருட்களையும் அரிவாளால் சேதப்படுத்தினார். இவரது அதிரடி நடவடிக்கையால் பயந்து போன வாடிக்கையாளர்கள் ஓட்டலை விட்டு அலறியடித்து ஓடினர். பிறகு, தி.மு.க பிரமுகர் சுதா அமர்சிங் தப்பி ஓடி விட்டார்.
இதையடுத்து ஓட்டலில் இருந்த சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில்  அரிவாளால் ஊழியர்களை வெட்ட முயன்றவர் தி.மு.க பிரமுகர் சுதா அமர்சிங் என்பது உறுதியானது. தி.மு.க பிரமுகர் வழக்கறிஞர் சுதா அமர்சிங் மீது கொலை முயற்சி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.
இது குறித்து பாலிமர் செய்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
https://twitter.com/polimernews/status/1034795021201895425
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் ட்விட்டரில்  என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்தனர்.
இதே போல சென்னை ஓட்டல் ஒன்றில் தனது ஆதரவாளர்களுடன் சென்று தாக்குதலில் ஈடுபட்ட தி.மு.க. பிரமுகர் யுவராஜ் என்பவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அந்த செய்தி சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தி.மு.க-வின் இமேஜ் அதளபாதாளத்திற்கு சென்றதை உணர்ந்த தி.மு.க.வின் அப்போதைய செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் வேறு வழியின்றி பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.
இந்த நிலையில் அதே போன்று கன்னியாக்குமரியில் ஓட்டலில் தி.மு.க. பிரமுகர் தாக்கிய சம்பவம் மீண்டும் நடந்திருப்பது மக்கள் மத்தியில் தி.மு.க மீது கூடுதல் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. "ஆட்சியில் இல்லாத போதே உச்சக்கட்ட வன்முறையில் ஈடுபடும் தி.மு.க-வினர், தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன வன்முறைகளில் ஈடுபடுவார்களோ?" என கேள்வி கேட்கும் குரல்கள் தமிழகம் எங்கும் பரவலாக ஒலிக்கின்றது.
இதேபோல மு.க.ஸ்டாலின் தி.மு.க தலைவராக பதவி ஏற்றதற்கு அடுத்த நாள் ஆகஸ்ட் 29 அன்று  திருச்சி மாவட்டத்தில் நடந்துள்ள இன்னொரு சம்பவம் தி.மு.க-வின் கோர முகத்தை உரித்து வைக்கிறது. திருச்சி திருவெறும்பூரில் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ துரையின் பேரன் ராம் பிரசாத் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வின் பேரன் ராம் பிரசாத் கல்லூரி மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. தி.மு.க-வின் அதிகாரவர்க்க, அராஜக மற்றும் ரவுடியிச வரலாற்றில் ஊரியதால் இவ்வாறு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு கைதாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தந்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
https://twitter.com/ThanthiTV/status/1034836791604330496
இது போதாது என்று ஸ்டாலின் தலைவரான இரண்டு நாட்களில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி சென்னையில் நந்தனம் முதல் விமான நிலையம் வரை பல கிலோ மீட்டர்களுக்கு நடைபாதைகளை சேதப்படுத்தி பல கருணாநிதியின் வாழ்க்கை குறித்து நூற்றுக்கணக்கான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை பொது மக்களுக்கு இடையூராகவும், பொது சொத்திற்கு சேதம் விளைவிப்பதாகவும் இருந்ததால் பொது மக்கள் தங்களது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தனர்.
https://twitter.com/madhavpramod1/status/1035051398046478336
இந்த அராஜகம் குறித்து மிர்ரர் நவ் ஆங்கில செய்தி தொலைக்காட்சி கடுமையான கண்டனங்களுடன் செய்தியை வெளியிட்டுள்ளது.
https://twitter.com/MirrorNow/status/1035053013755281408
தி நியூஸ் மினிட் ஆங்கில செய்தி நிறுவனமும் இது குறித்து கடுமையான கண்டனத்தை பதிவு செய்து செய்தி வெளியுட்டுள்ளது.
https://twitter.com/thenewsminute/status/1035379900427849729
ஆக, ஸ்டாலின் தி.மு.க-வின் தலைவரான நான்கு நாட்களிலேயே தமிழ் நாட்டில் பல்வேறு பகுதிகளில் தி.மு.க-வினர் வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்துள்ளனர். தமிழக மக்கள் தி.மு.க என்ற கட்சியின் மீது இருக்கும் பயத்தின் பிடியிலேயே வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Featured Image Credit - Outlook
Next Story