Top
undefined
Begin typing your search above and press return to search.

கம்போடியாவில் உள்ள புராதனமான சிவன் கோவிலை சீரமைக்கிறது மத்திய மோடி அரசு

கம்போடியாவில் உள்ள புராதனமான சிவன் கோவிலை சீரமைக்கிறது மத்திய மோடி அரசு

By :

  |  1 Sep 2018 3:16 AM GMT

தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் உள்ள புராதனமான சிவன் கோவிலின் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து  உதவுவதற்காக இந்தியா கம்போடியா இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள், கம்போடிய வெளியுறவு அமைச்சர் பிராக் சொகொன்னுடன்  பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

11-ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் கட்டப்பட்ட 'பிரே விஹார் கோவில்' (Temple of Preah Vihar) என்று அழைக்கப்படும் கோவில் கம்போடியாவில் உள்ள மிக பழைமை வாய்ந்த சிவன் கோவிலாகும். யுனெஸ்கோவின் (UNESCO) அறிக்கை படி இந்த கோவில் 800 மீட்டர் நீளமான நடைபாதைகள் மற்றும் படிக்கட்டுகள் மூலம் இணைக்கப்பட்டடுள்ளது. 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக வரலாறு உள்ள இந்த கோவில் முக்கியத் துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மிக தொன்மையான அழகிய கட்டிட கலையை கொண்ட இந்த கோவில் மத செயல்பாட்டிற்கு மிகவும் உகந்ததாக காணப்படுகிறது. கிமர் கட்டடக்கலையின் தலை சிறந்த உதாரணமாக இந்த கோவில் திகழ்வது மேலும் பெருமைக்குரியது.
Source : PTI

Next Story