Kathir News
Begin typing your search above and press return to search.

H ராஜா தலைமையில் நடந்த இந்து கோவில்கள் மீட்பு உண்ணாவிரதத்திற்கு இஸ்லாமியர்கள் உட்பட 2000 பேர் ஆதரவு

H ராஜா தலைமையில் நடந்த இந்து கோவில்கள் மீட்பு உண்ணாவிரதத்திற்கு இஸ்லாமியர்கள் உட்பட 2000 பேர் ஆதரவு

H ராஜா தலைமையில் நடந்த இந்து கோவில்கள் மீட்பு உண்ணாவிரதத்திற்கு இஸ்லாமியர்கள் உட்பட 2000 பேர் ஆதரவு

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Sep 2018 1:09 PM GMT


தமிழகத்திலுள்ள கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார் பா.ஜ.க தேசிய செயலாளர் திரு. H ராஜா.





இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
[caption id="attachment_2888" align="alignnone" width="275"]
Crowd at the Hunger Strike[/caption]
உண்ணாவிரதத்திற்கு பல தரப்பு மக்களும் ஆதரவு அளித்துள்ளனர். இரண்டாயிரதிற்கும் மேற்பட்ட பொது மக்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழக பா.ஜ.க தலைவர் Dr. தமிழிசை அவர்கள் நேரில் சென்று தன்னுடைய ஆதரவை பதிவு செய்தார்.
[caption id="attachment_2890" align="alignnone" width="300"] TNBJP president extending her support to Hunger Strike[/caption]
இந்து மக்கள் கட்சி தலைவர் திரு. அர்ஜுன் சம்பத், இந்து முன்னணி தலைவர் வீரத்துறவி திரு.ராம கோபாலன் ஜி அவர்கள், தமிழக பா.ஜ.க-வை சேர்ந்த திரு. கே.டி.ராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, இந்து கோவில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கும் நோக்கில், இஸ்லாமியர்களும் இந்த உண்ணாவிரதத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.
[caption id="attachment_2891" align="alignnone" width="278"] Ramagopalan Ji and other Hindu front leaders in Hunger Strike[/caption]
இதனைத் தொடர்ந்து, பா.ஜ.க தேசிய செயலாளரும் இந்து கோவில்களின் மீட்பு இயக்க தலைவருமான திரு. H. ராஜா அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தாவிட்டால் இது போன்ற போராட்டங்கள் வலுவடைந்து மிக பெரிய மக்கள் இயக்கமாக உருவெடுக்கும். இந்து சமய அறநிலையத்துறை அலுவலகங்கள் முன்பும், கோவில்கள் முன்பும் இது போன்ற போராட்டங்கள் தொடரும்", என்று கூறினார்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News