Top
undefined
Begin typing your search above and press return to search.

மோடி கேர் திட்டத்தில் பயனடைந்த முதல் பெண் குழந்தை : துவங்கியது உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் பயன்கள்

மோடி கேர் திட்டத்தில் பயனடைந்த முதல் பெண் குழந்தை : துவங்கியது உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் பயன்கள்

SG SuryahBy : SG Suryah

  |  2 Sep 2018 12:43 PM GMT

ஆயுஷ்மான் பாரத் என்ற மிகப்பெரிய காப்பீடு திட்டத்தை பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்த 2 நாட்களிலேயே, அரியானாவில் உள்ள மருத்துவமனையில், பெண் குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு அதற்கான சிகிச்சைக்கான பணம் வழங்கப்பட்டுள்ளது.

'மோடி கேர்' எனப்படும் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ₹ 5 லட்சம் வரையில், மருத்துவ செலவை மத்திய அரசே ஏற்கும். இந்த திட்டத்தில் உள்ள பயனாளிகள், அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் பணமில்லாமல் சிகிச்சை எடுத்து கொள்ளலாம்.



சுதந்திர தினத்தன்று இந்த திட்டத்தை பிரதமர் அறிவித்த நிலையில், ஆக.,17 அன்று கர்னல் மாவட்டம் கல்பனா சாவ்லா மருத்துவமனையில், அமித் குமார் என்பவரின் மனைவி, அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். இதற்கான செலவான ₹9,000, ஆயுஷ்மான் பாரத் கீழ் , பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக தேசிய சுகாதார அமைப்பு பதிவிட்ட ட்விட்டர் பதிவில், "ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் முதலாவதாக பணம் வழங்கப்பட்டுள்ளது. அரியானாவின் கல்பனா சாவ்லா மருத்துவமனையில் சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆயுஷ்மான பாரத் கீழ், மருத்துவமனைக்கு ₹9000 வழங்கப்பட்டுள்ளது", என்று அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story