Top
undefined
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து அனுபவித்து விட்டு தற்போது பா.ஜ.க வை மதவாத கட்சி என்று கூறும் "பச்சோந்தி தி.மு.க" - முதல்வர் விளாசல்!

பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து அனுபவித்து விட்டு தற்போது பா.ஜ.க வை மதவாத கட்சி என்று கூறும் பச்சோந்தி தி.மு.க - முதல்வர் விளாசல்!

SG SuryahBy : SG Suryah

  |  2 Sep 2018 12:38 PM GMT


தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் சேலத்திலிருந்து கருமந்துறை செல்லும் வழியில் பேளூர் என்ற ஊரில் அதிமுக நிர்வாகிகள் வரவேற்பு நிகழ்ச்சி அளித்தனர். அதில் முதல்வர் பேசியதாவது:-




மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்து கடைகோடியில் இருக்கின்ற ஏழை, எளிய மக்கள் முன்னுக்கு வர வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை தீட்டினார். அந்த திட்டங்கள் எல்லாம் தற்போது நடைமுறை படுத்தப்பட்டு மக்கள் பயன் பெற்று வருகிறார்கள்.
நான் வாழபாடி ஒன்றியத்திலே பல்வேறு பகுதிக்கு சென்று அங்கு உள்ள மக்களை சந்தித்துள்ளேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் இந்த பகுதியில் பாலம் அமைத்து தரப்பட்டது. நல்ல சாலை வசதியும் வழங்கப்பட்டது. கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக பல்வேறு பகுதிகளுக்கு குடிநீரும் வழங்கப்பட்டது. தற்போது பேளூர் பேருந்து நிலையம் ரூ.3.50 கோடியில் கட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கருணாநிதி எத்தனை முறை முதலமைச்சராக இருந்தார்? திமுக எத்தனை ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தது. ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தார். இந்த நாட்டு மக்களுக்கு என்ன செய்தார் என்று மட்டும் எண்ணிப் பார்க்க வேண்டும். மத்தியிலும் ஆட்சி, மாநிலத்திலேயும் ஆட்சி வேறு எந்த கட்சிக்கும் இந்த பொறுப்பு கிடைக்கவில்லை. ஆனால் தி.மு.க.வுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. பா.ஜ.க. இருந்த போதும் பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்தார்கள்.
காங்கிரஸ் கட்சி இருக்கும் போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தார்கள். இப்போது பா.ஜ.க மதவாத கட்சி என்று பேசுகிறார்கள். கூட்டணி சேர்ந்து 5 ஆண்டுகாலம் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு இந்த கட்சியின் கொள்கைகள் எல்லாம் பிடித்தது என்று தானே கூட்டணியில் இடம் பெற்றீர்கள். அவருடைய மகன், பேரன் என்று எல்லோரும் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார்கள்.
ஆனால் இன்று அது மதவாத கட்சி. சந்தர்பத்திற்கு ஏற்றவாறு கொள்கைகளை மாற்றிக் கொள்வார்கள். கிராமத்தில் பச்சோந்தி என்று சொல்வார்கள். அடிக்கடி நிறம் மாறும் கட்சி தான் திமுக. இவர்களுக்கு அதிகாரம் வேண்டும். பதவி வேண்டும். அதுதான் அவர்களின் குறிக்கோள். குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் பதவிக்கு வர முடியும் வேறு யாரும் வர முடியாது. வேறு யாருமே அவர்களுக்கு கட்சியில் எம்.எல்.ஏ ஆக முடியாது. எம்பி ஆக முடியாது. மந்திரி ஆக முடியாது.
ஆனால் அ.தி.மு.க ஜனநாயக கட்சி எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி. சாதரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும் இதற்கு நானே உதாரணம். நான் 1974-ல் கிளை கழக செயலாளராக சிலுமலையில் இருந்தேன் .கிளை கழக செயலாளராக இருந்த போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அதற்கு பிறகு ஒன்றிய பொறுப்பு, மாவட்ட பொறுப்பு, மாநில பொறுப்பு இப்படி ஒவ்வொரு பொறுப்பாக உழைத்து பெற்றேன். உழைக்கின்றவர்களுக்கு மரியாதை தருகின்ற இயக்கம் அ.தி.மு.க. இந்த கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். அந்த நிலையில் தான் நான் உயர்ந்துள்ளேன். ஸ்டாலின் எப்படி வந்தார்.
அவர் தந்தை தி.மு.க தலைவராக இருந்தார். அதனால் வந்தார். நான் அப்படி இல்லை. இந்த பேளூரில் ஒரு வார்டில் செயலாளராக இருந்தவர் முதலமைச்சராக முடியுமா? இந்த கட்சியில் தான் முடியும். வேறு எந்தக் கட்சியிலும் முடியாது. ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர்களை தான் மறைந்த முதல்வர் அம்மா அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுகின்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளார். நான் ஒரு விவசாயி. இன்றும் விவசாயம் செய்து வருகிறேன். இப்படிப்பட்ட சூழ்நிலையில் விவசாயிகளுக்கு தேவையான அத்தனை நன்மைகளையும் செய்து தருவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.மு.க.வின் சார்பில் வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்தார்களா? 14 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்தார்கள். புதிய தொழிற்சாலை கொண்டு வந்தார்களா, எந்த திட்டத்தையாவது தமிழகத்திற்கு கொண்டு வந்தார்களா? காவேரி பிரச்சினையை தீர்த்தீர்களா, முல்லை பெரியாறு பிரச்சினையை தீர்த்தீர்களா? பாலாறு தீர்த்தீர்களா? எதனையும் தீர்க்கவில்லை. அதிகாரம் வேண்டும், கொள்ளை அடிக்க வேண்டும். அதுதான் அவர்களின் திட்டம். மக்களுக்கு எந்த திட்டத்தையும் நடைமுறைப் படுத்தவில்லை.
ஆனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் காவேரி பிரச்சினையை தீர்க்க சட்டப் போராட்டம் நடத்தி அவர்கள் வழியில் வந்த அரசும் சட்டப்போராட்டத்தை ஒழுங்காக ஈடுபடுத்தி சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நிதியை பெற்று தந்திருக்கிறோம். விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்த ஆட்சி அம்மாவின் ஆட்சி. இவர்கள் ஆட்சியில் என்ன செய்தார்கள். எதுவும் செய்யவில்லை. தற்போது நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தையே முடங்க செய்தார்கள்.
இவ்வாறு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பேசினார்.




Next Story