Top
undefined
Begin typing your search above and press return to search.

பல ஆண்டுகளாக கன்னியாஸ்திரியை கற்பழித்த பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் கேரள காவல்துறை : இந்திய சட்டத்திற்கும் மேலானவர்களா பாதிரியார்கள் ?

பல ஆண்டுகளாக கன்னியாஸ்திரியை கற்பழித்த பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் கேரள காவல்துறை : இந்திய சட்டத்திற்கும் மேலானவர்களா பாதிரியார்கள் ?

SG SuryahBy : SG Suryah

  |  2 Sep 2018 6:36 PM GMT


கேரளாவைச் சேர்ந்த   கன்னியாஸ்திரி ஒருவர், கேரள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், 2014 – 2016 ஆண்டுகளில், கத்தோலிக்க டியோசிஸ் ஆப் ஜாலந்தர் தேவாலயத்தின் பாதிரியார் பிஷப் ஃபிராங்கோ முல்லகால் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்



கன்னியாஸ்திரியைக் கற்பழித்ததற்காக பஞ்சாபில் உள்ள ஜலந்தர் மறைமாவட்டத்தின் பிஷப் ஃபிராங்கோ முல்லகாலுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களைக் காவல்துறையினர் கண்டறிந்த போதிலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்கி வருவதாக கோவா குரோனிக்கல் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இயேசுவின் சகோதரிகள் கான்வென்ட் விருந்தினர் மாளிகையில் 13 முறை தான் கற்பழிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் அந்த கன்னியாஸ்திரி.



கோவா குரோனிக்கல் அறிக்கையின் படி, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி மேலும் ஒரு புகாரை காவல்துறையிடம் அளித்துள்ளார். அதன் படி, பாதிரியார் மீது தான் குற்றம் சாட்டியதால் தனக்கும் தன்னை சுற்றியுள்ளவர்களுக்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக அந்த கன்னியாஸ்திரி புகார் அளித்துள்ளார்.




தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை பாதிரியார் ஆரம்பத்தில் மறுத்து வந்தார். ஆய்வறிக்கையில், பாதிரியார் கொடுத்த அறிக்கை பொய்யானது என்று கேரள போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.



பாதிரியார் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து ஆதாரங்களையும் காவல்துறையினர் கையில் வைத்திருக்கும் போதிலும் அவரை கைது செய்ய கேரள காவல்துறையினர் தயங்கி வருகின்றனர். அரசியல் வாதிகளிடம் இருந்தும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் இருந்தும் வரும் அழுத்தம் தான் இதற்கு காரணம் என்று செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன.



[caption id="attachment_2898" align="alignnone" width="300"] Bishop Franco Mullakkal with Kerala CM Pinarayi Vijayan[/caption]

ஆண்டுக்கணக்கில் கன்னியாஸ்திரியை கற்பழித்தது நிரூபணம் ஆகியும் பாதிரியார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்குவது, பாதிரியார்கள் இந்திய அரசியல் சட்டத்திற்கும் மேலானவர்களா என்ற கேள்வியை மக்களிடையே எழுப்பியுள்ளது.






Next Story