Top
undefined
Begin typing your search above and press return to search.

தேங்காய் பொருட்கள் ஏற்றுமதி மூலம் வருவாய் நான்காண்டுகளில் ₹6448 கோடியாக அதிகரிப்பு

தேங்காய் பொருட்கள் ஏற்றுமதி மூலம் வருவாய் நான்காண்டுகளில் ₹6448 கோடியாக அதிகரிப்பு

SG SuryahBy : SG Suryah

  |  4 Sep 2018 7:20 AM GMT

கல்பவிருட்சமான தென்னைப் பனை என்பது மனித குலத்தின் ஆரோக்கியமான மற்றும் வசதியான வாழ்க்கைக்கான இயற்கையின் பெரும் ஊக்கம் என மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வித் துறை அமைச்சர் திரு. ராதா மோகன் சிங் கூறியுள்ளார். நமது நாட்டில் தேங்காய் பல்லாயிரம் ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருவதுடன் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம், மதம் மற்றும் சமூக பழக்க வழக்கங்கள், நாட்டுப்புறவியல், உணவு மற்றும் பானங்களின் தவிர்க்க முடியாத அங்கமாக தேங்காய் விளங்குகிறது. நாட்டுப்புறங்களில் தேங்காய் என்பது ஊட்டச்சத்தை அளிப்பதாகவும் நமது பாரம்பரியம் மரபாகவும் திகழ்கிறது.
தென்னை மரம் என்பது மனிதகுலத்தின் உண்மையான நண்பனாகவும் தேசிய ஒருங்கிணைப்பின் சின்னமாகவும் திகழ்கிறது.
தேங்காய் சமூகம் உருவாக்கப்பட்ட தினத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 2 ஆம்தேதி, ஆசிய பசிபிக் நாடுகளில் உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. அதிகபட்ச பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தேங்காய் வளர்ச்சி செயல்பாடுகளை இணக்கமாக்கவும் ஒருங்கிணைக்கவும் 18 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஒருங்கிணைந்த அரசு அமைப்பாக ஆசிய பசிபிக் தேங்காய் சமூகம் உருவாக்கப்பட்டது.
2004-14 காலகட்டத்தில் தேங்காய் பொருட்கள் ஏற்றுமதி மூலம் ஈட்டப்பட்ட வருவாய் ₹3,975 கோடி, 2014-18 காலகட்டத்தில் ₹6,448 கோடியாக அதிகரித்துள்ளது. மோடி அரசு மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக மலேசியா, இந்தோனேஷியா மற்றும் இலங்கைக்கு தேங்காய் எண்ணெய்யை ஏற்றுமதி செய்ய இந்தியா தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு வரை இந்த நாடுகளில் இருந்து இந்தியா தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இது தவிர முதல் முறையாக அதிக அளவு தேங்காய் கொப்பரைகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது.
வாரியம் மேற்கொண்டு வரும் திட்டங்களின் பயன்களை விவசாயிகள் பெறுவார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக கூறிய அமைச்சர், சிறந்த ஆரோக்கியம், வசதி மற்றும் நல்வாழ்வுக்காக தேங்காய் உற்பத்தியை முன்னெடுத்துச் செல்வார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். தேங்காய் உற்பத்தி திறன் மற்றும் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முதன்மை இடத்தைப் பெறுவது மட்டுமின்றி அதனை பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதியிலும் முதலிடத்தைப் பெற்றுள்ளது. மேலும் தேங்காயின் எண்ணற்ற சிறப்புகளும் இதன் மூலம் மேம்படும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
Next Story