Top
undefined
Begin typing your search above and press return to search.

உங்கள் கை விரலை மீறி ஒன்றும் முடியாது! இருக்கின்ற வங்கி சேவையில் 'அஞ்சல் வங்கி' தான் டாப்.

உங்கள் கை விரலை மீறி ஒன்றும் முடியாது! இருக்கின்ற வங்கி சேவையில் அஞ்சல் வங்கி தான் டாப்.

SG SuryahBy : SG Suryah

  |  4 Sep 2018 3:01 AM GMT

சிறிய நகரங்கள், கிராமங்களில்கூட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, சேமிப்பை பிரபலப்படுத்த வேண்டும் என்பதோடு, வங்கிச் சேவையற்ற, வங்கிக் கணக்கு இல்லாத மக்களையும் வங்கிச் சேவை சென்றடையும் நோக்கில், அஞ்சல் நிலையங்களில் வங்கிச் சேவை அளிக்கும் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
முதல்கட்டமாக, நாட்டில் 650 இந்திய தபால்துறையின் பேமென்ட் வங்கிக் கிளைகள் தொடங்கப்பட்டு, அவற்றில் 3,250 அஞ்சல் நிலையங்கள் இணைக்கப்பட்டு வங்கிச் சேவை அளிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 1.55 லட்சம் அஞ்சல் நிலையங்கள் உள்ளன. இவை அனைத்தும் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் இணைக்கப்பட்டு பேமென்ட் வங்கிச் சேவை அளிப்பதற்கான நடவடிக்கைகளை அஞ்சல் துறை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை, முதல்கட்டமாக 37 பேமென்ட் வங்கி கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் 185 அஞ்சல் நிலையங்கள் இணைக்கப்பட்டு வங்கிச் சேவைகள் வழங்கப்படவுள்ளன என தமிழக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த வங்கிச் சேவையில் கணக்கை தொடங்க கைரேகை மற்றும் ஆதார் அட்டை மட்டும் போதுமானது. வங்கிக் கணக்கை கைரேகை மூலமே இயக்க முடியும் என்பதால், இதை யாரும் தவறாக பயன்படுத்த முடியாது. இதனால் பிற வங்கிச் சேவைகளைக் காட்டிலும் இது அதிக பாதுகாப்புமிக்கது. குறிப்பாக பணத்தை எடுத்தல், பணத்தை மற்றொரு கணக்குக்கு மாற்றுதல் போன்றவற்றுக்கு கைரேகை அவசியம்.
அதே நேரத்தில், தொலைபேசி மற்றும் மின்சார கட்டணம் செலுத்துவதற்கு வாடிக்கையாளரிடம் முன்னதாகவே ஒப்புதல் பெற்று சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு மாதந்தோறும் செலுத்த வசதி உண்டு. இதில் முக்கியமானது வங்கிக் கணக்கு எண், ரகசிய எண் போன்றவைகளை நினைவில் வைத்துக் காக்க வேண்டிய அவசியமில்லை. மொத்தத்தில், ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு இந்த வங்கிச் சேவை பேருதவியாக இருக்கும்.
Next Story