Top
undefined
Begin typing your search above and press return to search.

பிராமணர்களின் டி.என்.ஏ (DNA) வை கொண்டது தான் காங்கிரஸ் கட்சி : மத்திய பிரதேச தேர்தலை ஒட்டி காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு

பிராமணர்களின் டி.என்.ஏ (DNA) வை கொண்டது தான் காங்கிரஸ் கட்சி : மத்திய பிரதேச தேர்தலை ஒட்டி காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு

SG SuryahBy : SG Suryah

  |  5 Sep 2018 6:27 PM GMT


மத்தியப் பிரதேச சட்டசபை தேர்தல்கள் நெருங்கி வருவதால், காங்கிரஸ் கட்சி மென்மையான இந்துத்துவ அணுகுமுறையை அதிகரித்து வருகிறது. மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர், மாநிலத்தின் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் கோசாலையை அமைப்போம் என்று உறுதியளித்துள்ளார். 'பெரும்பான்மை சமூகத்தை' சமாதானப்படுத்துவதற்கு கட்சித் தலைவர் ஒருவர் வேறொரு கருத்தையும் முன்வைதுள்ளார்.





ரிபப்லிக் டி.வி.யில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ ஒன்றின் படி, ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள பிராமண சமாஜ் நிகழ்ச்சியில் பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவை சேர்ந்த ரந்தீப் சிங் சுர்ஜெவாலா பிராமண அரசியலை கையிலெடுத்துள்ளார். நிகழ்ச்சியின் போது, "காங்கிரஸ் கட்சி பிராமணர்களின் டி.என்.ஏ (DNA) வை கொண்டது" என்று கூறியுள்ளார்.  மேலும் குறிப்பிடுகையில்,


"காங்கிரஸ் கட்சியின் ரத்தத்தில் பிராமண சாமாஜின் டி.என்.ஏ உள்ளது", என்று குறிப்பிட்டார்.




காங்கிரஸ் கட்சி மத அரசியலை கையில் எடுத்துக் கொண்டுள்ள சூழ்நிலையில்  சுர்ஜெவாலாவின் பேச்சுக்கள் சுவாரஸ்யமானதாக கருதப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி ஒரு இஸ்லாமிய கட்சி என்று குறிப்பிட்டார். முன்னாள் பிரதம மந்திரி திரு.மன்மோகன் சிங், இந்திய நாட்டின் வளங்களுக்கு இஸ்லாமியர்களுக்கு தான் முன்னுரிமை உள்ளது என குறிப்பிட்டிருந்தார்.



ஆனால் தேர்தல் காலங்களில் காங்கிரஸ் கட்சிக்காரர்களின் பேச்சுக்கள் வேறு விதமாக இருக்கிறது. குஜராத் தேர்தலுக்கு முன்பு, இந்துக்களை கவர்வதற்கு ராகுல் காந்தி கோவில் கோவிலாக ஏறி இறங்கினார். அதை Temple Run என்று ஊடகவியலாளர்கள் கூறி வந்தனர். எல்லாவற்றிற்கும் மேலே சென்று, ராகுல் காந்தி தான் ஒரு, "ஜானு தாரி", அதாவது "பூணுல் அணிந்த பிராமணன்", என்று கூறிக்கொண்டார்.



காங்கிரஸ் கட்சி ஒரு இஸ்லாமிய கட்சி என்று ராகுல் காந்தி கூறியதற்கு, மதத்தை அடிப்படையாகக் கொண்டு 2019 தேர்தல்களில் போட்டியிட முயற்சிக்கின்றது என்று காங்கிரஸ் மீது குற்றம் சாட்டியது பா.ஜ.க. “உங்கள் கட்சியை ஒரு இஸ்லாமிய கட்சி என்று கூறுவதற்கு தான் நீங்கள் ஆட்சி செய்த காலத்தில், “இந்து பயங்கரவாதம்” என்ற சொல்லை பயன் படுத்தினீர்களா ?”, என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராகுல் காந்திக்கு கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.



இடத்திற்கும் சந்தர்பத்திற்கும் ஏற்ப காங்கிரஸ் கட்சி தன்னுடைய நிலைப்பாட்டை மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் மாற்றி வருவது காங்கிரஸ் கட்சியின் நிலையற்ற தன்மையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.





Next Story