Top
undefined
Begin typing your search above and press return to search.

மக்கள் சந்திப்பில் வேலை வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண். பா.ஜ.க அலுவலகத்திலேயே வேலைக்கு அமர்த்தி அசத்திய தமிழிசை செளந்தரராஜன்!

மக்கள் சந்திப்பில் வேலை வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண். பா.ஜ.க அலுவலகத்திலேயே வேலைக்கு அமர்த்தி அசத்திய தமிழிசை செளந்தரராஜன்!

SG SuryahBy : SG Suryah

  |  5 Sep 2018 6:12 PM GMT

பா.ஜ.க தமிழக தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் மாநில தலைவர் டாக்டர்.தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் மக்கள் சந்திப்பு மாலை 4 மணி முதல் 5 மணி வரை கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் பொது மக்களிடம் பெறப்படும் குறைகளை கேட்டு தீர்வுகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் வாரம்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களின் கோரிக்கைகள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வந்தது. ஒவ்வொரு வாரமும் மாநிலத் தலைவருடன் பா.ஜ.க-வின் பல துறைகளை, பிரிவுகளைச் சேர்ந்த கட்சிப் பொறுப்பாளர்கள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனுக்களைப் பெற்று தீர்வுகளைக் காண முயற்சி செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் மிகவும் சுவாரஸ்யமான சம்பம் ஒன்று இந்த "மக்கள் சந்திப்பு" நிகழ்ச்சி நடந்துள்ளது. சில தினங்களுக்கு முன், பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற "மக்கள் சந்திப்பு" நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த பத்மாவதி என்ற மாற்றுத்திறனாளி பெண் தனது வாழ்வாதாரத்திற்காக வேலை வேண்டி மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜனிடம் மனு அளித்திருந்தார்.

அம்மனுவை பரிசீலித்த Dr.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், தனது அலுவலகத்திலேயே அப்பெண்ணிற்கு தட்டச்சர் பணி வழங்கி அசத்தியுள்ளார்.
Next Story