Top
undefined
Begin typing your search above and press return to search.

தேசிய ஆசிரியர் விருதை பெறவிருக்கும் கோவையை சேர்ந்த ஆர் சத்தி !

தேசிய ஆசிரியர் விருதை பெறவிருக்கும் கோவையை சேர்ந்த ஆர் சத்தி !

SG SuryahBy : SG Suryah

  |  5 Sep 2018 5:27 AM GMT

ஆண்டுதோரும் இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்து சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து தேசிய ஆசிரியர் விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது. இந்த விருதுகள் தேசிய  ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி வழங்கப்படுகின்றன. இந்த வருடத்திற்கான விருதுகளை துணை ஜனாதிபதி திரு வேங்கைய்யா நாயுடு வழங்கவிருக்கிறார். கோவை அருகே பஞ்சாயத் யூனியன் தொடக்க பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஆர் சத்தி இந்த விருதை பெற தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.





2015 ஆம் ஆண்டு பள்ளியில் இவர் சேரும்பொது 140 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வந்தனர். தற்போது 270 மாணவர்கள் உள்ளனர். மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பல முயற்சிகளை இவர் எடுத்துள்ளார். கடந்த மூன்று வருடங்களில் அந்த பகுதியில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் சென்று கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார். அதன் விளைவாக மாணவர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.





பள்ளி  கட்டடத்தை சீரமைக்க காரணமாக இருந்துள்ளார். இதற்காக L&T நிறுவனத்திடம் பேசி நிதியை திரட்டியுள்ளார். பள்ளி கழிப்பறை, RO குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், காய்கறி தோட்டம் ஆகிவற்றை பள்ளி வளாகத்தில் அமைத்துள்ளார். பள்ளியின் கரும்பலகைகளை மாற்றி ஸ்மார்ட் பலகைகளை வைத்துள்ளார், இதன்  மூலம் மாணவர்களுக்கு படங்களை கொண்டு பாடம் கற்பிக்கப்படுகிறது. யோகா, தற்காப்பு கலை, ஓவியம், பாட்டு முதலியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.





"குட்டிஸ் கமாண்டோ" என்ற திட்டத்தை அறிமுகபடுத்தியுள்ளார். மாணவர்கள் குழு ஒவ்வொரு நாளும் காலையில் அருகில் இருக்கும் இடத்தில் திறந்தவெளி கழித்தலை தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். மாணவர்கள் குழு மாலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.





வடநாட்டில் இருந்து வந்திருக்கும் கூலி தொழிலாளிகளின் 42 குழந்தைகளை பள்ளியில் சேர்த்துள்ளார். இவர்களுக்கு நல்ல தரமான கல்வியை அளிக்கிறார். அதில் ஒரு மாணவர் தமிழில் காமராஜர் பிறந்தநாளில் உரை நிகழ்த்தியுள்ளார்.





அரசு பள்ளிகளில் அதிக சம்பளம் வாங்க மட்டுமே சேரும் சில ஆசிரியர்கள் இருக்கும் தருணத்தில், பள்ளியின் வளர்ச்சி, கிராமத்தின் வளர்ச்சி, தரமான சந்ததியரை உருவாக்க அயராது உழைக்கும் சத்தி போன்ற ஆசிரியர்கள் உயர்ந்து நிற்கின்றனர்.

Next Story