Top
undefined
Begin typing your search above and press return to search.

பறக்கும் விமானத்தில் கூச்சலிட்ட மாணவி சோபியாவிற்கு விடுதலை புலிகளுடன் தொடர்பா ? - சுப்ரமணியன் சுவாமி பகீர்

பறக்கும் விமானத்தில் கூச்சலிட்ட மாணவி சோபியாவிற்கு விடுதலை புலிகளுடன் தொடர்பா ? - சுப்ரமணியன் சுவாமி பகீர்

SG SuryahBy : SG Suryah

  |  5 Sep 2018 2:56 AM GMT

சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் கனடாவில் படித்து வரும் சோபியா லூயி என்ற மாணவி பயணம் செய்துள்ளார். நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற அதே விமானத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்றுள்ளார். இதனை அடுத்து, பறக்கும் விமானத்தில் பா.ஜ.க-வை விமர்சிப்பதாக கருதிக் கொண்டு, விமான பயணிகளை அச்சுறுத்தும் வகையில் கூச்சலிட்டுள்ளார் மாணவி சோபியா லூயி.


மாணவி கூச்சலிட்டதை தொடர்ந்து, அதை கண்டித்த தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அந்த மாணவி. பின்னர் விமானம் தரையிறங்கியதும் சட்ட விரோதமாக பறக்கும் விமானத்தில் கோஷமிட்ட இளம்பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சௌந்தரராஜன் புகார் அளித்தார்.
தமிழிசை சௌந்தரராஜன் அளித்த புகாரை அடுத்து சோபியா லூயி கைது செய்யப்பட்டார். பின்னர், அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பொது மக்களுக்கு இடையூறு அளித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு பின்னர், சோபியா தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பொது மக்களுக்கு இடையூறு அளித்த குற்றச்சாட்டில் சோபியாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, சோபியா நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பிறகு, மாணவி சோபியாவுக்கு ஜாமின் வழங்கியது தூத்துக்குடி நீதிமன்றம். பொது இடங்களில் இனி இது போன்று பேசக்கூடாது என மாணவி சோபியாவுக்கு நீதிமன்றம் அறிவுரை அளித்தது. நாட்டின் மீது அக்கறை இருப்பது அவசியம்தான் என்றும், பொது இடங்களில் இனி இது போன்று பேசக்கூடாது என்றும் மாணவி சோபியாவுக்கு நீதிமன்றம் அறிவுரை அளித்துள்ளது.
இது குறித்து, A.N.I செய்தி நிறுவனத்திடம் பா.ஜ.க மூத்த தலைவர் திரு சுப்ரமணியன் ஸ்வாமி கூறுகையில், "மாணவி சோபியாவின் பின்புலனை பற்றி விசாரிக்க வேண்டும். அவர் கனடாவில் படித்து வருகிறார். கனடாவில் உள்ள தமிழர்கள் பலர் விடுதலை புலிகளாக இருக்கிறார்கள். ஆகையால் மாணவிக்கு விடுதலை புலிகளுடன் தொடர்பு இருக்கிறதா என விசாரிக்கப்பட வேண்டும். மேலும் விடுதலை புலிகள் பா.ஜ.க-வை பாசிச பா.ஜ.க என கூறுவது வழக்கம். பா.ஜ.க-வை போன்று பரந்த கொள்கையுடைய ஒரு கட்சி இல்லை", என்று கூறினார்.

Next Story