Top
undefined
Begin typing your search above and press return to search.

விமானத்தில் கூச்சலிட்ட சோபியா-வின் தந்தை உரைத்த பொய்களும்; சோபியா-வின் ட்விட்டர் கணக்கின் விஷமமும்

விமானத்தில் கூச்சலிட்ட சோபியா-வின் தந்தை உரைத்த பொய்களும்; சோபியா-வின் ட்விட்டர் கணக்கின் விஷமமும்

SG SuryahBy : SG Suryah

  |  5 Sep 2018 2:50 AM GMT

பறக்கும் விமானத்தில் கூச்சலிட்டு கைதாகி ஜாமினில் வெளி வந்திருக்கும் மாணவி சோபியாவின் தந்தை தந்தி டி.வி.யின் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.


அப்போது, மாணவி சோபியா விமானத்தில் கூச்சலிட்டதை ஒப்புக்கொண்ட அவரது தந்தை சாமி, தன் மகள், தன்னுடைய வேதனையை, இயலாமையை வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறினார். தன் மகள் பொறிய்யியல் பட்டதாரி என்பதால் விமான சட்டங்கள் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று சப்பைக்கட்டு கட்டிய அவர், அவர்களுக்கு பின்னால் எந்த ஒரு கட்சியோ அல்லது தீவிரவாத இயக்கமோ இல்லை என்று தெரிவித்தார்.


கூச்சலிடுவதற்கு முன்பே, கூச்சலிடப்போவதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளாரே என்ற கேள்விக்கு, தன் மகளிடம் ட்விட்டரோ அல்லது முகநூலோ இல்லை என்றும் அவர் ட்விட்டர் பதிவு இடவில்லை என்றும் பொய் உரைத்துள்ளார்.


ஆனால் சோபியா அவ்வாறு பதிவிட்டதை தமிழ் கதிரில் வெளியிட்டோம். மேலும் ஜாமினில் அவர் வெளி வந்ததும், சோபியா அந்த பதிவை நீக்கியது மட்டுமின்றி, தனது ட்விட்டர் கணக்கையும் முடக்கியுள்ளார். பிறகு, மீண்டும் சில மணி நேரத்திற்கு பிறகு செயல்பட துவங்கியது.




[caption id="attachment_2925" align="alignnone" width="300"] நீக்கப்பட்ட சோபியாவின் ட்விட்டர் பதிவு[/caption]

ஆனால் தற்போது குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அவரது ட்விட்டர் பதிவுகளை பார்க்க இயலும் படி, செட்டிங்ஸ் மாற்றப்பட்டுள்ளது.


சோபியாவின் தந்தை, சோபியாவிற்கு ட்விட்டர் கணக்கு இல்லை என்றும் அவர் அவ்வாறு பதிவிடவில்லை என்று பொய் உரைத்ததும் சோபியா பதிவிட்ட ட்விட்டர் பதிவை நீக்கி செட்டிங்க்ஸை மாற்றியதும் பல விதமான சந்தேகங்களை அவர் மீது எழுப்பியுள்ளது.


முன்னதாக மாணவி சோபியாவிற்கும் விடுதலை புலிகளுக்கும் தொடர்பு இருக்க கூடும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் திரு சுப்ரமணியன் ஸ்வாமி அவர்கள் சந்தேகம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

Next Story