Top
undefined
Begin typing your search above and press return to search.

மாணவி சோபியா அசல் பாஸ்போர்ட்டுடன் காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன்

மாணவி சோபியா அசல் பாஸ்போர்ட்டுடன் காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன்

SG SuryahBy : SG Suryah

  |  5 Sep 2018 9:05 AM GMT

பறக்கும் விமானத்தில் சட்ட விரோதமாக கூச்சலிட்டு பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தி, கைதாகி ஜாமினில் வெளி வந்துள்ளார் மாணவி சோபியா. ஜாமினில் வெளி வந்திருக்கும் மாணவி சோபியா பற்றிய பின் புலம் குறித்து பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. மாணவி சோபியா வின் ட்விட்டர் கணக்கு விஷமங்கள், அவரது தந்தை உரைத்த பொய்கள், விடுதலை புலிகனுடன் தொடர்பு என்ற சுப்ரமணிய சுவாமியின் சந்தேகம் போன்ற அடுக்கடுக்கான சம்பவங்கள் அவரை சுற்றி வந்துள்ளன.




இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க அமைச்சர் திரு ஜெயக்குமார், கண்ட இடங்களில் போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது என கூறினார். தமிழிசையின் புகாரை ஏற்று மாணவி சோபியாவின் பின்புலம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, வரும் 8ஆம்  தேதி அசல் பாஸ்போர்ட் உடன் காவல் நிலையத்திற்கு வரவேண்டும் என சோபியாவுக்கு புதுக்கோட்டை காவல்நிலையம் சம்மன் அனுப்பியுள்ளது. வழக்கு விசாரணையின் போது சோபியா காலாவதியான பாஸ்போர்ட் வழங்கியதாக தகவல்.



Next Story