Top
undefined
Begin typing your search above and press return to search.

பல்லாயிரகணக்கானோர் பங்கு பெற்ற அழகிரியின் அமைதி பேரணி : அதிர்ச்சியில் ஸ்டாலின் தரப்பு?

பல்லாயிரகணக்கானோர் பங்கு பெற்ற அழகிரியின் அமைதி பேரணி : அதிர்ச்சியில் ஸ்டாலின் தரப்பு?

SG SuryahBy : SG Suryah

  |  5 Sep 2018 9:54 AM GMT




மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு அவரது மகன் மு.க.அழகிரி இன்று (புதன்கிழமை) தனது ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி நடத்தினார். இந்த பேரணிக்கு சென்னை மாநகர போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.




தி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்பை வகித்த மு.க. அழகிரி, சகோதரர் மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 2014-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், மதுரையில் தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய மு.க.அழகிரி, சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி செப்டம்பர் 5-ஆம் தேதி (இன்று) அமைதி பேரணி நடத்த இருப்பதாகவும், அதில் தனது ஆதரவாளர்கள் ஒரு லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்றும் அறிவித்தார். பேரணி இன்று நடைபெற்ற நிலையில், முன்னேற்பாடுகளை செய்வதற்காக நேற்று முன்தினமே மு.க.அழகிரி மதுரையில் இருந்து சென்னை வந்தார். அவரது சார்பில், அமைதி பேரணிக்கு போலீசாரிடம் அனுமதி வேண்டி மனு அளிக்கப்பட்டது. போலீசாரும் அதற்கு அனுமதி அளித்துவிட்டனர்.


திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகே வாலாஜா சாலையில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மு.க. அழகிரி தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது. இந்தப் பேரணியில் பங்கேற்பதற்காக அவரது ஆதரவாளர்களும் வெளியூர்களில் இருந்து வந்தனர்.
[caption id="attachment_2954" align="alignnone" width="300"] MK Alagiri supporters gathered in the rally[/caption]

மு.க.அழகிரியின் அமைதி பேரணியை தொடர்ந்து, வழிநெடுக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மு.க.அழகிரியின் ஆதரவாளர்களின் வாகனங்களும் எங்கெங்கு நிறுத்த வேண்டும் என்ற தகவலும் முன்கூட்டியே அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.



இந்த நிலையில் பல்லாயிரகணக்கானோர் பேரணியில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, இந்த கூட்டம் மேலும் அதிகரித்து கொண்டே இருந்த நிலையில் பகல் 12.30 PM மணி அளவில், அழகிரி தனது ஆதரவாளர்களுடன் கலைஞர் சமாதியை அடைந்தார்.



முன்னதாக "கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர்", என்று அழகிரி கூறியது குறிப்பிடத்தக்கது.



இந்த பேரணியை தொடர்ந்து அழகிரியின் படை பலத்தை பார்த்து ஸ்டாலின் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


Next Story