Top
undefined
Begin typing your search above and press return to search.

மேகதாது அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதலை பெற அவசியம் இல்லை -காங்கிரஸ் கட்சியின் தமிழக விரோதம்

மேகதாது அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதலை பெற அவசியம் இல்லை -காங்கிரஸ் கட்சியின் தமிழக விரோதம்

SG SuryahBy : SG Suryah

  |  6 Sep 2018 6:17 AM GMT


கர்நாடகா அரசு காவிரியில் 5-வது அணையாக மேகதாது அணையை ₹5,912 கோடி செலவில் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது.




ஏற்கனவே கர்நாடகா தண்ணீர் திறந்துவிடுவதில்லை. மேகதாது அணை கட்டினால் உபரி நீர் திறந்து விடுவது சந்தேகம்தான். எனவே கர்நாடகாவை மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.



இது குறித்து பேசிய, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்க்கவே, மேகதாதுவில் அணை கட்ட விரும்புகிறோம். இதற்காக மத்திய நீர் ஆணையத்தை முறைப்படி அணுகி இருக்கிறோம்.தமிழ்நாட்டில் மேகதாது திட்டத்தின் மீது அண்டை மாநிலத்தின் கவலைகளை விவாதிக்க மாநில அரசு தயாராக உள்ளது. கர்நாடகா இந்த திட்டத்திற்கான தமிழ்நாட்டின் சம்மதத்தை நாடவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.



இது காங்கிரஸ் கட்சி தமிழகத்திற்கு செய்யும் மிக பெரிய துரோகமாக தமிழக அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகிறது.






Next Story