Top
undefined
Begin typing your search above and press return to search.

"எனது விளையாட்டு பயிற்சிக்கு அனைத்து உதவியும் செய்வதாக கூறிவிட்டு அழைப்புகளைக் கூட எடுக்கவில்லை நீங்கள்!", டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை வெளுத்து வாங்கிய விளையாட்டு வீராங்கனை!!

எனது விளையாட்டு பயிற்சிக்கு அனைத்து உதவியும் செய்வதாக கூறிவிட்டு அழைப்புகளைக் கூட எடுக்கவில்லை நீங்கள்!, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை வெளுத்து வாங்கிய விளையாட்டு வீராங்கனை!!

SG SuryahBy : SG Suryah

  |  6 Sep 2018 3:51 AM GMT

டெல்லி மாநில அரசாங்கம் சார்பில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான பாராட்டி விழா டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் டெல்லி அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்வில் வீரர், வீராங்கனைகள் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் உரையாடிய போது திவ்யா கக்ரான் எனும் வீராங்கனை இந்த வருடம் நடைபெற்ற காமன்வெல்த் விளையாடு போட்டிகளில் தான் பதக்கம் பெற்றதாகவும், அப்போது தாங்கள்(அரவிந்த் கேஜ்ரிவால்) என் விளையாட்டு மேம்பாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்ததாகவும், ஆனால் அதற்கு பிறகு விளையாட்டு பயிற்சி உதவிக்காக வேண்ட பல முறை கைபேசியில் அழைத்தும் ஒரு முறை கூட பதிலளிக்கவில்லை என்றும் எந்த ஒரு சிறு உதவி கூட டெல்லி அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவில்லை என்றும், சற்றே உதவி இருந்தால் மேலும் சிறப்பாக விளையாடி இருக்க முடியும் என்று தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார்.
https://twitter.com/ANI/status/1037340175465148416
"இப்போதாவது ஆசிய விளையாட்டு போட்டிகள் முடிந்து எங்களை அழைக்க வேண்டும் என்றும் தோன்றியுள்ளதே" அதற்கு நன்றி என்று கடிந்துள்ளார்.
மாற்று அரசியலை முன்வைக்கின்றோம் என்று அரசியல் ஆட்சியை பிடித்த அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி, ஆட்சிக்கு வந்த சில வருடங்களிலேயே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள், உட்கட்சி பூசல்கள், பணம் தருபவர்களுக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி, அதிகார துஷ்ப்ரயோகம் என திக்குமுக்காடி வருவதும், ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பல்வேறு முக்கிய நிர்வாகிகள், சட்டசபை உறுப்பினர்கள் ராஜினாமா செய்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், டெல்லி தலைமை செயலாளரை வீட்டிற்கே அழைத்து தனது சகாக்கள் மூலம் தாக்கிய அரவிந்த் கேஜ்ரிவால் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
டெல்லியில் காட்டாட்சியை வழங்கி வரும் அரவிந்த் கேஜ்ரிவாலை விளையாட்டு வீராங்கனை திவ்யா கக்ரன் சாட்டையடி அடித்துள்ளார்.
Next Story