Top
undefined
Begin typing your search above and press return to search.

எல்.கே.ஜி. முதல் முதுகலை பட்ட மேற்படிப்பு வரை இலவச கல்வி : யோகி அரசு அதிரடி

எல்.கே.ஜி. முதல் முதுகலை பட்ட மேற்படிப்பு வரை இலவச கல்வி : யோகி அரசு அதிரடி

SG SuryahBy : SG Suryah

  |  5 Sep 2018 6:35 PM GMT


உத்தர பிரதேச மாநிலத்தில் மகாத்மா ஜோதிபா ப்யூல் ரோகில்காந்த் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக, உத்தரப்பிரதேச மாநில துணை முதலமைச்சர் திரு தினேஷ் சர்மா கலந்து கொண்டார்.  அப்போது பேசிய அவர், உத்தர பிரதேசத்தில் யுகேஜி முதல் பட்ட மேற்படிப்பு வரை இலவசமாக கல்வி வழங்க உத்தரப்பிரதேச அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.






முதல்கட்டமாக அடுத்த கல்வியாண்டு முதல் முக்கிய நகரங்களில் ஆரம்ப கல்வி முதல் பட்ட மேற்படிப்பு வரை  இலவசமாக கல்வி வழங்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.



இதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகளை குறைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், மாணவர்களின் பொதுத்தேர்வு அட்டவணை இந்த மாதத்தில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.



மேலும் ஜி.எஸ்.டி தொடர்பான படிப்புகள் அடுத்த ஆண்டு முதல் கொண்டு வரப்படும் என்றும், ஜி.எஸ்.டி படிப்பு முறையால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.







Next Story