Top
undefined
Begin typing your search above and press return to search.

ஜன் தன் யோஜ்னா வங்கி கணக்கு வைப்பாளர்களுக்கு புதிய சலுகைகள், மோடி அரசு அதிரடி!

ஜன் தன் யோஜ்னா வங்கி கணக்கு வைப்பாளர்களுக்கு புதிய சலுகைகள், மோடி அரசு அதிரடி!

SG SuryahBy : SG Suryah

  |  6 Sep 2018 4:06 AM GMT

நேற்று(செப்டம்பர் 5, 2018) நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜன் தன் வங்கி கணக்குகளின் மிகைப்பற்று(ஓவர் டிராப்ட் - over draft) வரம்பை ₹5,000-லிருந்து ₹10,000-மாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை உபயோகபடுத்த வயது உச்ச வரம்பையும் 60 வயதிலிருந்து 65 வயதாக தளர்த்தியுள்ளது.


அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டத்தை மோடி அரசு தொடங்கியதிலிருந்து இப்போது வரை 32.54 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 83% கணக்குகள் ஆதார் என்னுடன் இணைக்கப்பட்டுள்ளன. ₹81,200 கோடி இருப்பில் உள்ளது என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.


நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் பிரிவின் செயலாளர் ராஜீவ் குமார் புதிய ஜான் தன் கணக்குகளுக்கு Rupay Card மீது இலவச விபத்து காப்பீடு ₹2 லட்சத்திற்கு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாக ட்வீட் செய்தார். 80% இந்தியர்களுக்கு வங்கி கணக்குகள் உள்ளன. ஜன் தன் திட்டத்தின் கீழ் "ஒவ்வொரு நபருக்கு ஒவ்வொரு வங்கிக்கணக்கு" என்பதே இலக்கு என்று அரசு கூறியுள்ளது. அனைத்து வீடுகளையும் குடும்பங்களையும் ஜன் தன் திட்டம் தொட்டுள்ளது.


ஜன் தன் திட்டத்தில் 53% பெண்களும், 59% கிராமப்புற / அரை நகர்ப்புற மக்களும் உள்ளனர். நேரடி பண பரிமாற்றங்கள்(Direct Benefit Transfer) 7.5 கோடி கணக்குகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story