Top
undefined
Begin typing your search above and press return to search.

ராகுல் காந்தி ஒரு மிகப்பெரிய கோமாளி : தெலுங்கானா சட்டசபையை கலைத்த முதல்வர் சந்திரசேகர ராவ் காட்டம்

ராகுல் காந்தி ஒரு மிகப்பெரிய கோமாளி : தெலுங்கானா சட்டசபையை கலைத்த முதல்வர் சந்திரசேகர ராவ் காட்டம்

SG SuryahBy : SG Suryah

  |  6 Sep 2018 5:32 PM GMT


தெலுங்கானா சட்டசபையை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தை கவர்னர் நரசிம்மனிடம் அளித்த பிறகு, "ராகுல் காந்தி ஒரு மிக பெரிய கோமாளி" என்று முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.





தெலுங்கானா சட்டசபையை கலைப்பதாக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு, அதற்கான பரிந்துரை கடிதத்தை கவர்னர் நரசிம்மனிடம் அளித்த பிறகு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான திரு. சந்திரசேகர ராவ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "தெலுங்கானாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே சட்ட சபையை கலைக்கும் முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். அரசின் அனைத்து கொள்கைகளும் திட்டங்களாக்கப்பட்டுள்ளதுடன் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைவரும் எங்களின் முடிவை புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டுள்ளனர். சர்வதேச அளவில் தெலுங்கானா அரசின் தரம் உள்ளது. இதனால் தெலுங்கானாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. தடையில்லா மின்சாரம் தெலுங்கானா மக்களுக்கு அளித்துள்ளோம்.





தெலுங்கானாவின் முதல் எதிரி காங்கிரஸ் கட்சி தான். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்து கண்ணடித்த ராகுல் காந்தி ஒரு மிகப்பெரிய கோமாளி. சட்டசபை கலைப்பு அரசியல் நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. நவம்பர் மாதத்திற்கு முன்பே தேர்தல் வரும் என எதிர்பார்க்கிறோம். நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தை துவங்க உள்ளோம். தேர்தலில் ராஷ்டிரிய சமிதி சார்பில் போட்டியிடும் 105 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.




ஒருவேளை வரும் தேர்தலில் ராஷ்டிரிய சமிதிக்கு மாற்றாக வேறு கட்சிக்கு மக்கள் ஓட்டளித்தால், மாநிலத்தின் வளர்ச்சி பின்னோக்கி செல்லும்", என்றார். அறிவிக்கப்பட்டுள்ள 105 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் நடப்பு எம்.எல்.ஏ- க்கள் இரண்டு பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





Next Story