Top
undefined
Begin typing your search above and press return to search.

ரவுடிகளை ஏவி இளம் பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் ஓசூர் தி.மு.க முன்னாள் நகரச் செயலாளருக்கு ஒரு வருடச் சிறை

ரவுடிகளை ஏவி இளம் பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் ஓசூர் தி.மு.க முன்னாள் நகரச் செயலாளருக்கு ஒரு வருடச் சிறை

SG SuryahBy : SG Suryah

  |  7 Sep 2018 5:24 PM GMT


ரவுடிகளை ஏவி இளம் பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் ஓசூர் தி.மு.க முன்னாள் நகரச் செயலாளருக்கு ஒரு வருடச் சிறைத் தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது என்று விகடன் செய்தி வெளியிட்டுள்ளது.





கிருஷ்ணகிரி மாவட்டம், தேர் பேட்டையைச் சேர்ந்த ஈஸ்வரிக்குச் சொந்தமான நிலத்தை என்.எஸ்.மாதேஸ்வரன் என்பவர் விற்பனை செய்துள்ளார். இதை அறிந்து அதிர்ச்சியடைந்த ஈஸ்வரி, மாதேஸ்வரனிடம் கேட்டபோது ரவுடிகளை வைத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டியிருக்கிறார். அதன் காரணமாகத் தற்கொலை முடிவை நாடியிருக்கிறார் ஈஸ்வரி என்பது தெரியவந்தது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக, அப்போதே மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் புகாரும் செய்திருக்கிறார். அதன் பிறகும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்துகொண்டே இருந்தன. எனவே, வேறு வழி தெரியாததால்,  தற்கொலை முடிவுக்குத் தள்ளப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார் ஈஸ்வரி.



சில மாதங்களுக்கு முன்பு, நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வசித்து வந்த  தி.மு.க. கிளை செயலாளராக பொறுப்பில் இருந்த கோபாலகிருஷ்ணன் (வயது 40), இரண்டரை வயது குழந்தைக்கு, பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கினார்.



காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடந்த போராட்டத்தின் போது, தி.மு.க.வை சேர்ந்த பெண் நிர்வாகி, தி.மு.க.வினர் தனது இடுப்பை கிள்ளி மானபங்க படுத்தியதாக குற்றம் சாட்டினார். இதற்கு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் நீதி கிடைக்கும் வரை தனியாக போராடுவேன் என்று தன்னந்தனியாக போராட்டத்தில்  குதித்தார். இதனை தொடர்ந்து அந்த பெண் நிர்வாகி தி.மு.க.வில்  இருந்து நீக்கப்பட்டார்.



தொடர்ந்து தி.மு.க-வில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








Next Story