Top
undefined
Begin typing your search above and press return to search.

இஸ்லாமிய மதத்திலிருந்து இந்து மதத்திற்கு திரும்பியவருக்கு இந்து முறைப்படி திருமணம் : மன்னார்குடி ஜீயர் மற்றும் சிதம்பர கருடநாத ஸ்வாமிகள் தலைமை

இஸ்லாமிய மதத்திலிருந்து இந்து மதத்திற்கு திரும்பியவருக்கு இந்து முறைப்படி திருமணம் : மன்னார்குடி ஜீயர் மற்றும் சிதம்பர கருடநாத ஸ்வாமிகள் தலைமை

SG SuryahBy : SG Suryah

  |  7 Sep 2018 6:19 AM GMT


இஸ்லாமிய மதத்திலிருந்து தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்பியவர் மன்னார்குடியை சேர்ந்த தமிழ்செல்வன். இவரின் திருமணம் இந்து மத சம்பிரதாயபடி திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில் நேற்று நடைபெற்றது. மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் ஸ்ரீ  செண்பகமன்னார் ஸ்வாமிகள் மற்றும் சிதம்பரம் கருடானந்த ஸ்வாமிகள் ஆகியோர் இந்த திருமண நிகழ்ச்சியை தலைமை ஏற்றி நடத்தி உள்ளனர்.










சில மாதங்களுக்கு முன்பு, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் என்பவரது உடலை, இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் தெரு வழியாக எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே கலவரம் வெடித்தது. பட்டியலின மக்களின் கடைகள், ஆட்டோ, பைக் ஆகியவற்றுக்கு தீ வைத்தும், அவர்களை கொலை வெறியில் தாக்கியும், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மதவாதிகள் அட்டூழியம் செய்தனர். இதை தொடர்ந்து, மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் ஸ்ரீ  செண்பகமன்னார் ஸ்வாமிகள் பாதிக்கப்பட்ட பட்டியிலின மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.





Next Story