Kathir News
Begin typing your search above and press return to search.

காதல் திருமணம் செய்த இளம்பெண்ணிற்கு "விபச்சாரி" பட்டம் வழங்கிய தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை!

காதல் திருமணம் செய்த இளம்பெண்ணிற்கு "விபச்சாரி" பட்டம் வழங்கிய தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை!

காதல் திருமணம் செய்த இளம்பெண்ணிற்கு விபச்சாரி பட்டம் வழங்கிய தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Sep 2018 5:16 PM GMT


திருவையாறு வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக பஞ்சாயத்தார்கள் ஜமா அத்தார்கள், நாட்டாண்மைக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், தங்கள் ஊரின் தெற்கு தெருவை சேர்ந்த ஜனாப். R. முஹம்மது பாரூக் - ஹயாத்துணிஷா அவர்களின் மகளான M.யாஸ்மினி செய்து கொண்ட காதல் திருமணத்தை "விபச்சாரம்" என்று கூறப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் ஜமாத் தலைவர் திரு. முஹம்மத் அயுசாலிஹ் உலாவி எழுதியுள்ள கடிதத்தில், இந்த காதல் திருமணம் சமுதாயத்தில் ஜமாத்தின் நிலைப்பாட்டை சேதப்படுத்துவதாகவும், இஸ்லாமியர்களால் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடத்தப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.


சமூக ஊடகங்களில் சிலர் இந்த திருமணத்தை வரவேற்றனர். ஆனால் அந்த பெண்ணின் சமூகத்தினரின் எதிர்வினையானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய திருமணங்கள் "ஹலால்" இல்லை என்று ஒரு ட்விட்டர் வாசி கருத்து தெரிவித்துள்ளார். அந்த பெண்மணி அல்லாஹ்விற்கு பயந்திருந்தால், அவர் இதைச் செய்திருக்க மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார் . திருமணத்தை வரவேற்கும் சிலர், திருமணத்தை "விபச்சாரம்" என்று அறிவித்ததை எதிர்த்துள்ளனர். பல கலப்பு திருமணங்கள் நடைமுறையில் உள்ள மாநிலங்களில் தமிழகம் ஒன்றாகும். திருமணத்திற்கு எதிராக ஜாமாத்தில் இருந்து வெளிப்படையான எதிர்ப்பைக் கண்ட சில நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்.

இஸ்லாமிய மதத்தினரரிடம் இருந்து வெளிப்படையான எதிர்ப்பு வந்துள்ள நிலையில், புது மண தம்பதிகளான யாஸ்மினா மற்றும் கார்த்திகேயனுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படுமா என்ற கேள்வி தற்போது மக்களிடையே எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News