Top
undefined
Begin typing your search above and press return to search.

"எங்கள் கட்சியில் தவறு நடப்பது சகஜம்தான்!" பாலியல் புகார் குறித்து விசாரிக்க முடியாது என்று கூறிய கம்யூனிஸ்ட் கட்சி பின்புலம் கொண்ட கேரள மகளிர் ஆணையத் தலைவி ஜோசபினின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

எங்கள் கட்சியில் தவறு நடப்பது சகஜம்தான்! பாலியல் புகார் குறித்து விசாரிக்க முடியாது என்று கூறிய கம்யூனிஸ்ட் கட்சி பின்புலம் கொண்ட கேரள மகளிர் ஆணையத் தலைவி ஜோசபினின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

SG SuryahBy : SG Suryah

  |  8 Sep 2018 2:21 PM GMT

கேரளாவில் பாலியல் தொந்தரவு புகாரில் சிக்கியுள்ள ஆளும் கட்சி மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ.,வுக்கு ஆதரவாக அம்மாநில பெண்கள் ஆணைய தலைவி ஜோசபின் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சோர்நுர் தொகுதியின் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பி.கே.சசி. இவர் மீது, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் தொந்தரவு புகாரை, இரண்டு நாட்களுக்கு முன் கட்சியின் மத்திய நிர்வாகத்திற்கு அனுப்பினார். இந்த புகாரை, கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா கரத்துக்கும் அனுப்பியிருந்தார்.


இது தொடர்பாக கேரள மாநில பெண்கள் ஆணைய தலைவி ஜோசபின் கூறுகையில், "புகார் ஒன்றும் புதியது அல்ல. நாம் அனைவரும் மனிதர்கள் தான், தவறுகள் நடக்க தான் செய்யும். கட்சியில் இருப்பவர்களும், இது போன்ற தவறுகளை செய்தவர்கள் தான். புகார் கூறிய பெண், போலீசிடம் புகார் கூறவில்லை. தாமாக முன்வந்து விசாரிக்கவேண்டுமானால், புகாரின் தன்மை, மீடியாக்களில் எப்படி வெளியானது உள்ளிட்ட சில அடிப்படை தகவல்கள் தேவை. இது இல்லாமல் நாங்களாக விசாரிக்க முடியாது" என்றார்.
பாலியல் புகார் குறித்து விசாரிக்க முடியாது என்று கூறிய கம்யூனிஸ்ட் கட்சி பின்புலம் கொண்ட கேரள மகளிர் ஆணையத் தலைவி ஜோசபினின் கருத்துக்கு கேரளாவில் வலுக்கிறது எதிர்ப்பு. கம்யூனிஸ்ட் காட்டாட்சியில் கேரள மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக சீர்கெட்டுக்கிடப்பது குறிப்பிடத்தக்கது.
Cover Pic Credits - ANI
Next Story