Top
undefined
Begin typing your search above and press return to search.

திருச்சபை, அரசாங்கம், காவல்துறை என எங்கும் நியாயம் கிடைக்கவில்லை - பாதிரியாரால் கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக கேரளாவில் வெடித்தது போராட்டம்

திருச்சபை, அரசாங்கம், காவல்துறை என எங்கும் நியாயம் கிடைக்கவில்லை - பாதிரியாரால் கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக கேரளாவில் வெடித்தது போராட்டம்

SG SuryahBy : SG Suryah

  |  8 Sep 2018 1:48 PM GMT

கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், கேரள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், 2014 – 2016 ஆண்டுகளில், கத்தோலிக்க டியோசிஸ் ஆப் ஜாலந்தர் தேவாலயத்தின் பாதிரியார் பிஷப் ஃபிராங்கோ முல்லகால் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்

கன்னியாஸ்திரியைக் கற்பழித்ததற்காக பஞ்சாபில் உள்ள ஜலந்தர் மறை மாவட்டத்தின் பிஷப் ஃபிராங்கோ முல்லகாலுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களைக் காவல்துறையினர் கண்டறிந்த போதிலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்கி வருவதாக கோவா குரோனிக்கல் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. 2014 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் இயேசுவின் சகோதரிகள் கான்வென்ட் விருந்தினர் மாளிகையில் 13 முறை தான் கற்பழிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் அந்த கன்னியாஸ்திரி.


கோவா குரோனிக்கல் அறிக்கையின் படி, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி மேலும் ஒரு புகாரை காவல்துறையிடம் அளித்துள்ளார். அதன் படி, பாதிரியார் மீது தான் குற்றம் சாட்டியதால் தனக்கும் தன்னை சுற்றியுள்ளவர்களுக்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக அந்த கன்னியாஸ்திரி புகார் அளித்துள்ளார்.



தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை பாதிரியார் ஆரம்பத்தில் மறுத்து வந்தார். ஆய்வறிக்கையில், பாதிரியார் கொடுத்த அறிக்கை பொய்யானது என்று கேரள போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.


பாதிரியார் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து ஆதாரங்களையும் காவல்துறையினர் கையில் வைத்திருக்கும் போதிலும் அவரை கைது செய்ய கேரள காவல்துறையினர் தயங்கி வருகின்றனர். அரசியல்வாதிகளிடம் இருந்தும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் இருந்தும் வரும் அழுத்தம் தான் இதற்கு காரணம் என்று செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன.


அதன் தொடர்ச்சியாக பஞ்சாபில் உள்ள ஜலந்தர் மறைமாவட்டத்தின் பிஷப் ஃபிராங்கோ முல்லகால் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கன்னியாஸ்திரிகள், கேரள மாநிலம் கொச்சியில் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். அதில் ஒரு கன்னியாஸ்திரி கூறுகையில், "நாங்கள் எங்கள் சகோதரிக்காக போராடுகிறோம். திருச்சபை, அரசாங்கம் மற்றும் காவல்துறை என எங்கும் நியாயம் கிடைக்கவில்லை. எங்கள் சகோதரிக்கு நீதி கிடைப்பதற்காக எந்த அளவிற்கும் செல்ல நாங்கள் தயாராய் இருக்கிறோம்," என்று கூறினார்.


https://twitter.com/ANI/status/1038353516543139840?s=19

கிறிஸ்துவ மதத்தின் பெயரை சொல்லி, எந்த தவறையும் செய்து விட்டு தப்பி விடலாம் என்ற நிலைமை கம்யூனிஸ்ட் ஆளும் கேரள மாநிலத்தில் வந்திருப்பது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Pic Credits - ANI



Next Story