Top
undefined
Begin typing your search above and press return to search.

பெட்ரோலுக்கு மாற்று: 7 ஆண்டுகளில் ₹1 இலட்சம் கோடி அளவுக்கு எத்தனால் தொழில் வளர்ச்சி!

பெட்ரோலுக்கு மாற்று: 7 ஆண்டுகளில் ₹1 இலட்சம் கோடி அளவுக்கு எத்தனால் தொழில் வளர்ச்சி!

SG SuryahBy : SG Suryah

  |  9 Sep 2018 3:06 AM GMT

பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எத்தனால், மெத்தனால் போன்ற எரிபொருள் இந்தியாவுக்கு அவசியம் தேவை என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
எத்தனாலை எரிபொருளாகப் பயன்படுத்தினால் காற்று மாசுபாடு, எரிபொருள் செலவு, எண்ணெய் இறக்குமதி ஆகியன குறையும் என மத்தியச் சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.


டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், ஆட்டோமொபைல் துறை வளர்ந்து வருவதால், எரிபொருளுக்கான இறக்குமதி செலவு அதிகரித்து வருகிறது. இந்தியப் பொருளாதாரத்திற்கே இது மிகப்பெரும் சவாலாக இருப்பதால் புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்.


நான் பெட்ரோல், டீசலுக்கு எதிரானவன் இல்லை. இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரித்து, சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை. அதனை முன்னெடுக்கவே, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்த அரசு ஊக்குவித்து வருவதாக தெரிவித்தார்.



அப்போது பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு மாற்றாகச் செலவு குறைந்த, மாசுபாடில்லாத எரிபொருளைத் தயாரிப்பதற்காக மத்திய அரசு ஒரு கொள்கையை உருவாக்கி வருவதாகத் தெரிவித்தார். இதன் மூலம் இந்தியாவில் அடுத்த 7ஆண்டுகளில் ஒரு இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு எத்தனால் தொழில் வளர்ச்சி கண்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
டீசல் மூலம் பேருந்தை இயக்க ஒரு கிலோ மீட்டருக்கு ₹110-ம், எத்தனால் மூலம் பேருந்தை இயக்க ₹78-ம், மின்சாரம் மூலம் பேருந்தை இயக்க ₹50-ம் செலவாவதாக அவர் தெரிவித்தார். மாற்று எரிபொருளைப் பயன்படுத்துவதால் பயணக் கட்டணமும் காற்று மாசுபாடும் குறைவதாக நிதின் கட்கரி தெரிவித்தார்.
Next Story