Top
undefined
Begin typing your search above and press return to search.

பகுத்தறிவு பகலவன் சமாதியில் துணைவி மற்றும் புதல்வியால் படைக்கப்பட்ட தயிர் வடை! சந்தி சிரிக்கும் நாத்திக கூத்து.

பகுத்தறிவு பகலவன் சமாதியில் துணைவி மற்றும் புதல்வியால் படைக்கப்பட்ட தயிர் வடை! சந்தி சிரிக்கும் நாத்திக கூத்து.

SG SuryahBy : SG Suryah

  |  9 Sep 2018 2:57 AM GMT


கருணாநிதிக்கு பிடித்த உணவு தயிர் வடையாம். ஆக, தயிர்வடையை கருணாநிதியின் சமாதியில் வைத்து அவரது துணைவி ராசாத்தியும், அவரின் புதல்வி கனிமொழியும் படைத்து, மலர்தூவி வணங்கி உள்ளனர். இதே கனிமொழி தான் இந்து மத சடங்குகளை கொச்சைப்படுத்தியும், பிற மத சடங்குகளை கண்டுக்கொள்ளாமலும் ஊர் ஊராக சென்று போலி நாத்திக வகுப்பு எடுத்து வருபவர் என்பது கேலிக்கூத்து.

கருணாநிதி மறைந்த 3-வது நாளில் கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இந்து குடும்பங்களில் மறைந்தவருக்கு செய்யப்படும் அனைத்து சடங்குகளும் செய்யப்பட்டன. கருணாநிதி மறைந்த 30-வது ஸ்டாலின் குடும்பத்தினர் 30-வது நாள் சடங்குகளை செய்தனர்.

இதற்கொல்லாம் ஒரு படி மேலே சென்று செப்டம்பர் 6-ஆம் தேதி வியப்பை ஏற்படுத்தியது திடீரென கருணாநிதியின் துணைவி ராசாத்தி, கனிமொழி ஆகியோர் கருணாநிதிக்கு பிடித்த தயிர் வடையை அவரது சமாதியில் வைத்து படைத்து வணங்கியது தான்.
பகுத்தறிவுவாதி, கடவுள் மறுப்புக் கொள்கை போன்றவற்றில் தீவிர பற்றுடைய கருணாநிதியின் வீட்டிலா இது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன என பலரும் ஆச்சரியப்படுகின்றனர். கடவுள் மறுப்புக் கொள்கை  மற்றும் பகுத்தறிவு போன்றவற்றை கருணாநிதி கடைசிவரை உறுதியாக பின்பற்றியதாக கூறி வருகின்றனர். கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு நடைபெறும் சடங்குகள், சம்பவங்கள் அனைத்தும் கருணாநிதி நித்தமும் கூறி வந்த பகுத்தறிவு கொள்கைக்கு எதிராகவே நடந்து வருகிறது. தன் சொந்த குடும்பத்திலேயே பகுத்தறிவை புகுத்த முடியாதவராகவே மறைந்துள்ளார் கருணாநிதி என்பதை யாராலும் மறுக்க முடியாது.
Next Story