Top
undefined
Begin typing your search above and press return to search.

"அந்த கன்னியாஸ்திரி ஒரு விபச்சாரி" எம்.எல்.ஏ ஜார்ஜ் கருத்தால் கேரளாவில் சர்ச்சை; கொதிப்படையும் கன்னியாஸ்திரிகள்!

அந்த கன்னியாஸ்திரி ஒரு விபச்சாரி எம்.எல்.ஏ ஜார்ஜ் கருத்தால் கேரளாவில் சர்ச்சை; கொதிப்படையும் கன்னியாஸ்திரிகள்!

SG SuryahBy : SG Suryah

  |  9 Sep 2018 4:25 AM GMT

கன்னியாஸ்திரிகள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவம் கேரளத்தில் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக புகார் அளித்தும் போலீசார் மற்றும் அரசியல்வாதிகளின் நிர்ப்பந்தங்களுக்கு பயந்து நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர் என்று கன்னியாஸ்திரிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இது தொடர்பாக சமீபத்தில்
போராட்டத்தில் குதித்தனர்
 கன்னியாஸ்திரிகள்.
இந்த நிலையில் நடந்தது, கற்பழிப்பே அல்ல, அது பரஸ்பர உடலுறவு என்று கேரள எம்.எல்.ஏ. கருத்து தெரிவித்து உள்ளார். இது சர்ச்சையை மேலும் கூட்டி உள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பாதிரியாரக இருக்கும் ப்ராங்கோ மூலக்கல் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளித்தார். அவர் கடந்த 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்த்திருந்தார்.
அதன் பேரில் ஜலந்தர் சென்ற திருவனந்தபுரம் போலீசார், பாதிரியார் ப்ராங்கோ மூலக்கல்லிடம் விசாரித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஜலந்தர் பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் இன்று போராட்டம் நடத்தினர்.
அவர்கள் திருவனந்தபுரம் நீதிமன்ற வளாகம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் கன்னியாஸ்திரிகள், பாதிரியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பதாகைகளை கைகளில் ஏந்தி போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் கேரள சுயேச்சை எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கன்னியாஸ்திரிகள் விவகாரம் குறித்து அவர் "அந்த கன்னியாஸ்திரி ஒரு விபச்சாரி என்பதில் யாருக்கும் ஐயம் வேண்டாம். 12 முறை அனுபவித்து விட்டு, 13-வது முறை கற்பழிப்பு என்று கூறுகிறார். அவர் ஏன் முதல் முறையை புகார் அளிக்கவில்லை.?" என்று கூறினார்.
https://twitter.com/ANI/status/1038474706108735488?s=20
சட்டமன்ற உறுப்பினரின் இந்த பொறுப்பற்ற பேச்சு, கன்னியாஸ்திரிகளை கொதிப்படைய செய்துள்ளது.
Cover Pic Credits - ANI
Next Story