Top
undefined
Begin typing your search above and press return to search.

சத்தீஸ்கரில் கிராமவாசிகளை கட்டி வைத்து அடித்து தாக்குதல் நடத்திய இடதுசாரி பயங்கரவாதிகள் #UrbanNaxals

சத்தீஸ்கரில் கிராமவாசிகளை கட்டி வைத்து அடித்து தாக்குதல் நடத்திய இடதுசாரி பயங்கரவாதிகள் #UrbanNaxals

SG SuryahBy : SG Suryah

  |  9 Sep 2018 2:07 PM GMT




சத்தீஸ்கர் தந்தீவாடா மாவட்டத்தில் உள்ள கிராமவாசிகள், இடதுசாரி பயங்கரவாதிகளால் மரங்களில் கட்டி வைக்கப்பட்டு, தாக்கப்பட்டுள்ளனர். இடதுசாரிகள் அழைத்திருந்த கூட்டத்தில் கலந்துகொள்ள கிராமவாசிகள் மறுத்து விட்டனர் என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.



தாக்குதலுக்குள்ளான 35 கிராமவாசிகளும் காயமடைந்தனர் என்று தண்டேவாடா காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவா தெரிவித்துள்ளார். தாக்குதலுக்குள்ளான 35 கிராம வாசிகளில் 10 பேர் மிக கடுமையாக காயமடைந்தனர்.



காயமடைந்தவர்களில் குறைந்தபட்சம் 16 பேர் குவாகோண்டா சமூக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். கடுமையான காயங்களுடன் மற்றொரு கிராமவாசி தாந்தேவாடா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல்லவா தெரிவித்தார்.



நக்சலைட்டுகள் காவல்துறையினரின் உதவியுடன் மருத்துவமனையில் தாக்குதல் நடத்துவார்கள் என அஞ்சி, தாக்குதலில் காயமடைந்த பல கிராமவாசிகள், மருத்துவமனையில் மருத்துவம் பெற மறுத்துவிட்டனர்.



இது போன்று மக்களை கட்டி வைத்து அடிப்பது இது தான் முதல்முறை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அண்மையில் நடந்த கைதுகளின் விளைவாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. காவல்துறையிடம் புகார் செய்ய ஒன்பது கிராமவாசிகள் முன் வந்துள்ளனர்.





Next Story