Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் படுதோல்வி அடைந்த பாரத் பந்த்: தி.மு.க மற்றும் ஸ்டாலினின் கூக்குரலை ஒட்டுமொத்தமாக நிராகரித்த தமிழர்கள் - அதிர்ச்சியில் தி.மு.க!

தமிழகத்தில் படுதோல்வி அடைந்த பாரத் பந்த்: தி.மு.க மற்றும் ஸ்டாலினின் கூக்குரலை ஒட்டுமொத்தமாக நிராகரித்த தமிழர்கள் - அதிர்ச்சியில் தி.மு.க!

SG SuryahBy : SG Suryah

  |  10 Sep 2018 7:58 AM GMT

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து, நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில்  இயல்பு வாழ்க்கையில் சிறிதளவும் பாதிப்பு அடையவில்லை.

தமிழகத்தில் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆளுங்கட்சியான அ.தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சிகளான தே.மு.தி.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகியவை தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.


த.வெள்ளையன் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை இந்த முழு அடைப்புக்கு ஆதரவை தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. தொ.மு.ச. பேரவை, சி.ஐ.டி.யு., எ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி. உள்பட 10 தொழிற்சங்கங்களும் முழு வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கிறது.இந்த முழு அடைப்பு போராட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.

 

சென்னை மாநகரில் பெரும்பாலான மளிகைக்கடைகள், டீக்கடைகள், உணவகங்கள், பெட்டிக்கடைகள், காய்கறிக்கடைகள், பெட்ரோல் பங்குகள் என அனைத்தும் வழக்கம்போல் திறக்கப்பட்டுள்ளன.



சென்னை மாநகர அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் நிலையில், ஷேர் ஆட்டோ, ஆட்டோ, டாக்சிகள் என அனைத்தும் இயங்கி வருகின்றன. இருப்பினும், பாதுகாப்பு கருதி பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலத்தின் பிறபகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலும் சுமார் 90 சதவீதம் வரை மளிகைக்கடைகள், உணவகங்கள் தனியார் நிறுவனங்கள் திறந்துள்ளன. உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் மட்டும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அதேபோல், திருப்பதிக்கும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்களிலும் கூட்டம் வழக்கம் போலவே காணப்படுகிறது.
சேலம் மாநகரிலும், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி, பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சேலம் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையத்திலிருந்து வழக்கம்போல் பேருந்துகள் இயங்குகின்றன. ஆட்டோக்களும் வழக்கம்போல் ஓடும் நிலையில், கடைகள் திறக்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தை பொறுத்த வரையில், இந்த பந்த் மிக பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. மற்ற கட்சிகள் பெயரளவில் பங்குக்கொண்டாலும் தி.மு.க-காங்கிரஸ் கட்சிகள் தான் இந்த பந்திற்கு முழு வீச்சில் போராடின. 2014 லோக் சபா தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாமல் படு தோல்வி அடைந்தது தி.மு.க. பிறகு, 2016-ல் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் தோல்வியையே தழுவியது. இது எல்லாம் போதாது என்ற குறைக்கு 2017-ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஆர்.கே.நகர் சட்டசபை இடைத்தேர்தலில் 15 கட்சிகளுக்கு மேல் கூட்டணி வைத்த தி.மு.க படுதோல்வி அடைந்து டெப்பாசிட் கூட பெற முடியாமல் போனது.
இதனைத் தொடர்ந்து, தி.மு.க-வின் அரசியல் செல்வாக்கு தமிழகத்தில் அதளபாதாளத்தில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story