Top
undefined
Begin typing your search above and press return to search.

காவல் அதிகாரியை பட்டப்பகலில் தகாத வார்த்தைகளால் திட்டி, கைகலப்பில் ஈடுபட்ட தி.மு.க எம்.எல்.ஏ சுரேஷ் ராஜன்: தொடர்கதையாகும் தி.மு.க-வினரின் அட்டூழியங்கள்

காவல் அதிகாரியை பட்டப்பகலில் தகாத வார்த்தைகளால் திட்டி, கைகலப்பில் ஈடுபட்ட தி.மு.க எம்.எல்.ஏ சுரேஷ் ராஜன்: தொடர்கதையாகும் தி.மு.க-வினரின் அட்டூழியங்கள்

SG SuryahBy : SG Suryah

  |  10 Sep 2018 2:38 PM GMT

தி.மு.க கன்னியாகுமரி மாவட்ட எம்.எல்.ஏ திரு.சுரேஷ் ராஜன் அவர்கள் காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் திட்டும்  வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பாரத் பந்த் என்று அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. எங்கும் பெரிதாக மக்களிடம் இந்த கடையடைப்புக்கு வரவேற்பு இல்லை. காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாட்டில் தி.மு.க தலைவர் தாமாக முன் வந்து ஆதரவு அளித்தார். பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிக சர்ச்சைக்குள்ளானது என்னவோ கன்னியாகுமரி மாவட்டம்தான்.
நாகர்கோவில் நகரத்தின் பிரதான சாலை ஒன்றில் அம்மாவட்ட தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ் ராஜன் தலைமையில், இரண்டு திமுக எம்.எல்.ஏ.க்கள் உட்பட 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் திறந்துள்ள கடைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சாலையில் நின்று கொண்டு வாகனங்களை மறித்து வந்தனர். அங்கு விரைந்து வந்த நாகர்கோவில் டவுன் எஸ்.ஐ. முத்துமாரி, அவர்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், சுரேஷ் ராஜன் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் கலைய மறுத்து அங்கேயே நின்று கொண்டிருந்தனர். இது மெல்ல மெல்ல வாய்த்தகராறாக மாறியது.
https://twitter.com/imprasath/status/1039127678878531584?s=20
பின்னர், தி.மு.க எம்.எல்.ஏ சுரேஷ் ராஜன் அவர்கள் காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் மிகவும் அருவறக்கத்தக்க வகையில் திட்ட ஆரம்பித்து விட்டார். தி.மு.க-வின் தொடர் அட்டூழியத்தால் தமிழக மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
நாகர்கோவிலில் பட்டப்பகலில் நடுரோட்டில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்வாரா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
சமூக ஊடகங்களில் தி.மு.க-வின் அடாவடிதனத்தை கடுமையாக சாடி வருகின்றனர் தமிழக இளைஞர்கள்.
https://twitter.com/thangarajbrte/status/1039155430671314944?s=20
Next Story