Top
undefined
Begin typing your search above and press return to search.

பாதுகாப்பில் புதிய சாதனையை படைத்துள்ளது இரயில்வே துறை : வரலாறு காணாத அளவு இரயில்வே விபத்துக்கள் குறைவு

பாதுகாப்பில் புதிய சாதனையை படைத்துள்ளது இரயில்வே துறை : வரலாறு காணாத அளவு இரயில்வே விபத்துக்கள் குறைவு

SG SuryahBy : SG Suryah

  |  10 Sep 2018 3:33 PM GMT

இரயில்வே விபத்துக்களின்  எண்ணிக்கை 75 ஆகவும்,  உயிரிழப்புகளின்   எண்ணிக்கை 40 ஆகவும் குறைந்துள்ளது. மேலும் செப்டம்பர் 2017 முதல் ஆகஸ்ட் 2018 வரையிலான இடைப்பட்ட காலத்தில் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவு தன் பாதுகாப்பு  சாதனையை அழுத்தமாக பதிவு  செய்துள்ளது இரயில்வே துறை என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

செப் 2016 - ஆக 2017 வரையில் 80 இரயில் விபத்துக்களும், 249 உயிரிழப்புக்களும் நிகழ்ந்துள்ளன.  இதே காலகட்டத்தில் 2014 - 15 வரையில்  விபத்தின் எண்ணிக்கையும், உயிரிழப்புக்கள் எண்ணிக்கையும் 196 மற்றும் 108 ஆகும். அதுவே செப் 2013 - ஆக 14 வரையில் 139 விபத்துகளில் குறைந்தபட்சம் 275 உயிரழப்புகள் நாடெங்கிலும் பதியப்பட்டுள்ளன.

செப் 1, 2013 முதல் ஆக 31, 2014 வரையில் இரயில் மோதல்களாலும், தடம் புரள்தலாலும் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை செப் 1, 2017 முதல் ஆக 31, 2018 வரையிலான உயிரழப்புகளுடன்  ஒப்பிட்டு பார்த்தால் மொத்த எண்ணிக்கை 62 இல் இருந்து 4 ஆக குறைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 93 சதவீத குறைப்பாகும். என அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக டைம்ஸ் ஆப் இந்திய மேற்கோள் காட்டியுள்ளது.

அதே வேளையில் இரயில் மோதல்களாலும், தடம் புரள்தலாலும் காயமடைந்தோரின் எண்ணிக்கை 69 இல் இருந்து 56 ஆக குறைந்துள்ளது என்ற மேற்கண்ட  தகவலையும்  அவ்வதிகாரி தெரிவித்துள்ளார்.

மேம்பட்ட இரயில் பாதைகள், தற்போதிருக்கும் பெட்டிகளுக்கு மாற்றாக எல்.ஹெச்.பி உதவியுடன்  சேர்க்கப்பட்டிருக்கும் புதிய பெட்டிகள். நான்காண்டுகளில் இல்லாத அளவு  பராமரிப்பில் அதீத கவனம் என அனைத்தும்  விபத்துகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துள்ளது  என அவர்  "பிரஸ் ட்ரஸ்ட் ஆப் இந்தியா" பத்திரிக்கையில் தெரிவித்துள்ளார்.


இரயில்வே பாதைகள் மாபெரும் அளவில் சீரமைக்கப்பட்டதும், பாதுகாப்பு குறித்த தொடர் பின்னூட்டங்களும், சிறப்பான பாதுகாப்பு குறித்து பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகளும் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட கூர்மையான கண்காணிப்பும் இரயில் விபத்துகள் மூலம் ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை அளப்பரியா வகையில் குறைத்துள்ளது . இவ்வறிக்கையின் படி, 2017 - 18 வரையில்
கிட்டதட்ட 4405 கி.மீ பழைய இரயில்வே பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. இதுவே இந்த நிதி ஆண்டின் அதிகபட்ச சீரமைப்பு பணி ஆகும்.

கடந்த சில ஆண்டுகளில் இரயில்வே துறை "ஆளில்லா லெவல் கிரேசிங்"களை அகற்ற மிக தீவிரமாக பணியாற்றி வந்துள்ளது. 2017 - 18 ஆண்டு வரையில் தேசிய போக்குவரத்து துறை, இது போன்ற  மொத்தம் 1560  கிராசிங் களை அகற்றியுள்ளது. இதன் மூலம் விபத்துகள் குறைந்துள்ளன. மேலும் 2018 -19 ஆம் ஆண்டிற்குள் 1600 ஆளில்லா லெவல் கிராசிங்களை அகற்ற இலக்கை வகுத்துள்ளதாக அவ்வதிகாரி தெரிவித்தார்.

ஆளில்லா கிரேஸிங் களில் நிகழும் விபத்தின் எண்ணிக்கை வெறும் 8 ஆக குரைந்துள்ளது. செப்டம்பர் 2013 முதல் ஆகஸ்ட் 2014 வரை நிகழ்ந்த விபத்தின் எண்ணிக்கை 52.  இதே எண்ணிக்கை 2014 - 15 வரையில் 39 ஆகவும், 2015 - 16 வரையில் 23 ஆகவும், 2016 - 17 வரை 13 ஆகவும் படிப்படியாக  குறைந்துள்ளது என அதிகாரிகள் மேற்கோள் காட்டியதை குறிப்பிட்டுள்ளது "டெய்லிஸ் ரிப்போர்ட்"
Next Story