Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னை விமான நிலையம் உள்பட அரசு நடத்தும் விமான நிலையங்களில் இனி MRP விலையில் உணவு மற்றும் குடிபானங்கள்

சென்னை விமான நிலையம் உள்பட அரசு நடத்தும் விமான நிலையங்களில் இனி MRP விலையில் உணவு மற்றும் குடிபானங்கள்

SG SuryahBy : SG Suryah

  |  10 Sep 2018 4:50 PM GMT

விமான பயணிகளுக்கு இதைவிட என்ன நிறைவான செய்தி கிடைத்துவிட போகிறது? அரசு நடத்தும் விமான நிலையங்களில் வெகு விரைவாக திண்பண்டங்கள் மற்றும் குடிபானங்களை, அதன் அசல் விலையிலேயே (MRP)  பிரத்யேக கவுண்டர்களில் விற்பனை செய்ய இருப்பதாக “ப்ரஸ் ட்ரஸ்ட் ஆப் இந்தியா” செய்தி வெளியிட்டுள்ளது.


இந்த முடிவு இந்திய விமானநிலைய ஆணையத்தால்(AAI) செப்டம்பர் 8 சனிக்கிழமை அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் ஏஏஐ – யின் அறிக்கையின் படி, இதுபோன்ற கவுண்டர்கள் நாடெங்கிலும்  உள்ள 90க்கும் மேற்பட்ட விமானநிலையங்களில் நிறுவப்படயிருப்பதாகவும், இதில் மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரூவில் இயங்கும் தனியார் விமான நிலையங்கள் இணைக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில கவுண்டர்கள் இயல்பான விலையில் குடிபானங்களையும், குடிநீர் பாட்டில்களையும் விற்க துவங்கிவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


விமானநிலையங்களில் உணவுக்கும், குடிபானங்களுக்கும் எதிராக வசூலிக்கப்படும் கட்டணங்களை எதிர்த்து பயணிகளால் மிகத்தீவிரமாக பதியப்பட்ட புகார்களின் விளைவாய் இந்த சீர்திருத்தம் நடைபெற்றிருப்பதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது.


சமீப காலங்களில் விமான பயணம் என்பது உயரடுக்கு மக்களுக்கு என்ற எல்லையுள் நின்றுவிடுவதில்லை. இப்போது சமூகத்தின் அனைத்து தர மக்களும் விமானத்தில் பயணிக்க துவங்கிவிட்டனர் குறிப்பாக உதான் திட்டம்(UDAN scheme)  நிறுவப்பட்ட பின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் திண்பண்டங்கள், தேநீர் போன்றவைகளுக்கு செலுத்தும் தொகைக்கு போதிய தேர்வுகள் இல்லை. எனவே இந்த கவுண்டர்கள் பயணிகளுக்கு பெறும் நிறைவை தருமென அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


சென்னை, சிம்லா, மற்றும் புனே ஆகிய விமான நிலையங்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் இது போன்ற கடைகளை முன்னரே நிறுவிவிட்டன. அதே வேளையில் நாட்டில் பரபரப்பாக இயங்கும் இன்னும் பல விமான நிலையங்களில் ஏஏஐ இது போன்ற இயல்பு விலை உணவு கவுண்டர்களை திறக்க திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story