Top
undefined
Begin typing your search above and press return to search.

குடியேற்ற கொள்கையில் புதிய மாற்றங்களை கொண்டு வரும் மத்திய மோடி அரசு : நாட்டின் பாதுகாப்பிற்காக புதிய முயற்சிகள்

குடியேற்ற கொள்கையில் புதிய மாற்றங்களை கொண்டு வரும் மத்திய மோடி அரசு : நாட்டின் பாதுகாப்பிற்காக புதிய முயற்சிகள்

SG SuryahBy : SG Suryah

  |  10 Sep 2018 4:21 PM GMT

1983 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பழைய குடியேற்ற கொள்கைக்கு மாற்றாக புதிய குடியேற்ற கொள்கையை கொண்டுவரும் பணியில் தற்போது நரேந்திர மோடி அரசு ஈடுபட்டிருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ்  தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் பல நிபந்தனைகள் குறிப்பிடத்தகுந்த அளவில் மாற்றம் கண்டுள்ளன. எனவே 1983 ஆம் ஆண்டு முதல் இருந்து வரும் பழைய கொள்கை அதற்கேற்றார் போல்  மேம்படுத்த வேண்டும் என "வெளியுறவு துறை அமைச்சகம் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்திய விவகாரங்கள் துறை செயலாளர் திரு. தன்யனேஸ்வர் முலாய்  தெரிவித்துள்ளார்.

"இந்திய அரசால் இயற்றப்பட்டு தற்சமயம் நடப்பில் இருக்கும்  குடியேற்ற கொள்கை  பழமையானது. அவை மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. 1983 ஆம் ஆண்டு முதல் உலகளாவிய வகையில் ஏராளமான நிபந்தனைகள் கணிசமாக மாற்றம் கண்டுள்ளன. பழைய கொள்கை உருவாக்கப்பட்ட  ஆண்டு தொட்டு பல பகுதிகளில் ஏராளமான புதிய  விஷயங்கள் உருவாகியுள்ளன "  என  மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.

அது மட்டுமின்றி தற்போதைய செயல்முறை திட்டமிட்டதை காட்டிலும் அதி விரைவாக முன்னேறி விட்டதாகவும் புதிய வரைவுக்கு கொடுக்க வேண்டிய போதிய அவகாசத்தை வழங்க கூட  நேரமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

"கொள்கையின் குறைபாடுகள் பல சட்ட ஓட்டைகளை உள்ளடக்கியிருப்பதால் அந்த குறைபாடுகளின் மூலம் "அனுமதி செயல்முறையை" மிக லாவகமாக தவிர்த்து மக்கள் குடியேற  இக்கொள்கை அனுமதித்து விடும் மற்றும் பாதுகாப்பு தளபதிகளின் மேற்பார்வை பற்றாக்குறையும் ஏற்பட வாய்ப்புள்ளது", என  உச்ச நீதிமன்றத்தின் பயிற்சி  வழக்கறிஞரும் டெல்லியை சேர்ந்த சட்ட  நிறுவனத்தின் துணை உரிமையாளரும் ஆன நிகில் வர்மா  ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நடப்பில் இருக்கும் கொள்கை  முறையாகவும் மற்றும் முறையற்றும் குடியேருபவர்களுக்கு இடையே எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்தவில்லை. மேலும் அவர், 2014 இல் இஸ்லாமிய தீவிரவாத கும்பலால் இராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களின் உதாரணத்தையும் சுட்டி காட்டியுள்ளார்.
Next Story