Top
undefined
Begin typing your search above and press return to search.

₹30 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை கடத்தலில் அறநிலையத்துறை அதிகாரிகள், காவல்துறைக்கு தொடர்பா? சூடு பிடிக்கிறது விசாரணை

₹30 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை கடத்தலில் அறநிலையத்துறை அதிகாரிகள், காவல்துறைக்கு தொடர்பா? சூடு பிடிக்கிறது விசாரணை

SG SuryahBy : SG Suryah

  |  11 Sep 2018 7:04 AM GMT

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோயிலில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சிலைகள் திருடப்பட்டு, ஆஸ்திரேலியாவுக்கு கடத்தி விற்கப்பட்டதில் முக்கிய புள்ளிகள், அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு தொடர்பு இருப்பது சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையில் தெரியவந்துள்ளது என்று தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட திருநெல்வேலி மாவட்டம் வீரவ நல்லூர் அருகே அத்தாளநல்லூர் மூன்றிஸ்வரமுடையார் கோவில், சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது. இக் கோவிலில் கல்லாலான 2 துவாரபாலகர் சிலைகள் கடந்த 1995-ம் ஆண்டு திருடப்பட்டன. விசாரணையில் துவார பாலகர் கற்சிலைகள் ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டு, ₹.4.98 கோடிக்கு விற்கப்பட்டது தெரியவந்தது.
இதுபோல், திருநெல்வேலி மாவட்டம் பழவூர் நாறும்பூநாதர் கோவிலில் இருந்து 2005-ம் ஆண்டில் 13 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக 18 பேர் மீது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து சுபாஷ் சந்திர கபூர், தீனதயாளன் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து நடராஜர், சிவகாமி அம்பாள், காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர், கிருஷ்ணர், அஸ்திரதேவர், வெயிலுகந்த அம்மன், கோமதி அம்மன், சுப்பிரமணியர் ஆகிய 9 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளில் நடராஜர் சிலை மட்டும் ₹15 கோடி மதிப்புள்ளது என தெரியவந்தது.
இந் நிலையில்தான, கல்லிடைக் குறிச்சி அறம் வளர்த்த நாயகி அம்மன் சமேத குலசேகர முடையார் கோயிலில் 1982-ம் ஆண்டு திருட்டுபோன நடராஜர் சிலையை, ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் ₹30 கோடிக்கு வாங்கியது புலன் விசாரணைக் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது.
குலசேகரபாண்டிய மன்னரால் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்ட இக்கோவிலில் ஐம்பொன்னா லான இரண்டரை அடி உயர நடராஜர் சிலை, 2 அடி உயர சிவகாமி அம்மன் சிலை, ஒன்றரை அடி உயர மாணிக்கவாசகர் சிலை, ஒரு அடி உயர பலி நாயகர் சிலை ஆகியவை 1982 ஆம் ஆண்டு திருடுபோயின.
கல்லிடைக்குறிச்சி காவல்துறையால் துப்புதுலக்க முடியாத நிலையில், 1984-ம் ஆண்டு இந்த வழக்கு `கண்டுபிடிக்க முடியாத வழக்கு’ என முடிக்கப்பட்டது.
இந் நிலையில்தான், அந்த நடராஜர் சிலை ₹30 கோடிக்கு விற்கப்பட்டு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதை, உயர் நீதிமன்ற புலன் விசாரணைக் குழு தற்போது கண்டுபிடித்துள்ளது.
சிலைகள் திருட்டு நடைபெற்ற போது இக் கோவில் நிர்வாகம் அறங்காவலர் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை எனவும் அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், சிலைகள் திருடுபோன காலத்தில் அறங்காவலர்களாக இருந்தவர்கள், அற நிலையத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்ட பலரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுகின்றனர்.
இவர்களிடம் நடத்தப்படும் தீவிர விசாரணையின் முடிவில் கல்லிடைக்குறிச்சியில் மட்டுமின்றி மேலும் பல கோயில்களில் நடைபெற்ற சிலை கடத்தல் சம்பவங்களின் முழு நெட்வொர்க் மற்றும் இன்னும் யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது? என்பது குறித்த மர்மங்களுக்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story