Top
undefined
Begin typing your search above and press return to search.

“13 முறை கற்பழிப்பிற்கு ₹5 கோடி விலை” கர்த்தரின் பெயரால் நடத்தப்பட்டு பேரம் பேசப்பட்ட காமவெறியாட்டம் - குமுறும் கன்னியாஸ்திரியின் சகோதரர்

“13 முறை கற்பழிப்பிற்கு ₹5 கோடி விலை” கர்த்தரின் பெயரால் நடத்தப்பட்டு பேரம் பேசப்பட்ட காமவெறியாட்டம் - குமுறும் கன்னியாஸ்திரியின் சகோதரர்

SG SuryahBy : SG Suryah

  |  12 Sep 2018 3:24 PM GMT





2014 – 2016 ஆண்டுகளில், கத்தோலிக்க டியோசிஸ் ஆப் ஜாலந்தர் தேவாலயத்தின் பாதிரியார் பிஷப் ஃபிராங்கோ முல்லகால் கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

கன்னியாஸ்திரியைக் கற்பழித்ததற்காக பஞ்சாபில் உள்ள ஜலந்தர் மறை மாவட்டத்தின் பிஷப் ஃபிராங்கோ முல்லகாலுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களைக் காவல்துறையினர் கண்டறிந்த போதிலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்கி வருவதாக கோவா குரோனிக்கல் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. 2014 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் இயேசுவின் சகோதரிகள் கான்வென்ட் விருந்தினர் மாளிகையில் 13 முறை தான் கற்பழிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் அந்த கன்னியாஸ்திரி.


பாதிரியார் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து ஆதாரங்களையும் காவல்துறையினர் கையில் வைத்திருக்கும் போதிலும் அவரை கைது செய்ய கேரள காவல்துறையினர் தயங்கி வருகின்றனர். அரசியல்வாதிகளிடம் இருந்தும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் இருந்தும் வரும் அழுத்தம் தான் இதற்கு காரணம் என்று செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன.


அதன் தொடர்ச்சியாக பஞ்சாபில் உள்ள ஜலந்தர் மறைமாவட்டத்தின் பிஷப் ஃபிராங்கோ முல்லகால் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கன்னியாஸ்திரிகள், கேரள மாநிலம் கொச்சியில் போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.


இதனிடையே, பிஷப் ஃபிராங்கோ முல்லகாலை பதவி நீக்கம் செய்யக் கோரி இந்தியாவுக்கான வாடிகன் தூதர் கியாம்பெடிஸ்டா டிக்வட்ரோவுக்கு கன்னியாஸ்திரி கடிதம் எழுதியுள்ளார்.  கடந்த 8-ம் தேதி அனுப்பிய இக்கடிதத்தின் நகலை செய்தியாளர்களிடம் செவ்வாய்கிழமை அந்த கன்னியாஸ்திரி வழங்கினார்.
அதில், அரசியல், பணபலத்தின் மூலம் தனக்கு நீதி கிடைக்கவிடாமல் தடுப்பதாக பிஷப் மீது குற்றம் சாட்டியுள்ளார். இக்கடிதத்தின் நகல் இந்திய கத்தோலிக்க பேராயர்களின் கூட்டமைப்பின் (சிபிசிஐ) தலைவர் கார்டினல் ஆஸ்வால்டு கிரேஷியஸ் மற்றும் டெல்லி மெட்ரோபாலிட்டன் பேராயர் அனில் கெளட்டோ உள்பட 21 பேருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தன் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்றால் ₹ 5 கோடி தருவதாக, பாதிக்கப்பட்ட கேரள கன்னியாஸ்திரியின் சகோதரருக்கு பிஷப் ஃபிராங்கோ முல்லகால் ஆசை காட்டுவதாக புகார் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் சகோதரர் கூறும் பொழுது, ஃபிராங்கோ முல்லகால்   மற்றும் இரண்டு பாதிரியார்கள் தன்னையும், தனது நண்பர்களையும்  அணுகி  அவர் மீதான புகாரை வாபஸ் பெற்று கொண்டால் ₹5 கோடி தருவதாக ஆசை காட்டினார் என்று தெரிவித்துள்ளார்.




Next Story