Top
undefined
Begin typing your search above and press return to search.

"ஓரினச்சேர்க்கை காட்டுமிராண்டித்தனம்" : பகுத்தறிவு பேசிய துரைமுருகனும், ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு அளித்த கனிமொழியும்

ஓரினச்சேர்க்கை காட்டுமிராண்டித்தனம் : பகுத்தறிவு பேசிய துரைமுருகனும், ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு அளித்த கனிமொழியும்

SG SuryahBy : SG Suryah

  |  12 Sep 2018 6:08 PM GMT




ஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என சட்டப்பிரிவு 377 தெரிவித்திருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த சட்டப்பிரிவை நீக்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர். அதில் தி.மு.க எம். பி. யும்,  கலைஞர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியும்  அடக்கம்.







இந்த நிலையில் நெல்லையில் நடந்த திருமண நிகழ்வு ஒன்றில் திமுக பொருளாளர் துரைமுருகன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஓரினச்சேர்க்கை என்பது காட்டுமிராண்டித்தனம். ஆணுக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது ஒரு காட்டுமிராண்டித்தனமான நடைமுறை. இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு சட்டம் துணைபோகிறது. இந்த சட்டத்திற்கு மக்கள் சிலரும் துணையாக உள்ளனர் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.



ஓரினச்சேர்க்கை குறித்து பெரியார் வழி வந்த தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் இரண்டு வேறுபட்ட, எதிர்மாறான கருத்துக்களை தெரிவித்திருப்பது தி.மு.க-வின் சமுதாய கொள்கைகளில் உள்ள குழப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.






Next Story