Top
undefined
Begin typing your search above and press return to search.

காஷ்மீரில் கல் எரியும் குண்டர்களை பிடிக்க இஸ்ரேலிய முறையை பின்பற்றிய பாதுகாப்பு படையினர்

காஷ்மீரில் கல் எரியும் குண்டர்களை பிடிக்க இஸ்ரேலிய முறையை பின்பற்றிய பாதுகாப்பு படையினர்

SG SuryahBy : SG Suryah

  |  12 Sep 2018 6:03 PM GMT

கடந்த வெள்ளி அன்று, ஜம்மு காஷ்மீர் காவல் துறையின்  பணியாளர்கள் சிலர் கல் எரிபவர்களை பிடிக்கும் பணியில்  இஸ்ரேலிய முறையை பின்பற்றியது கவனத்தை  பெற்றுள்ளது. ஸ்ரீநகரில் வெள்ளி அன்று  ஜாம மஸ்ஜி-த்தில் தொழுகை முடித்து திரும்புபவர்கள் மீது கல் எரிய திரண்டிருந்தது கூட்டம். அக்கூட்டத்துடன்  கூட்டமாக  சில போலீஸ் அதிகாரிகளும்  கல் எரிபவர்களை போல் வேடமிட்டு  கலந்து இருந்ததாக  அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அறிக்கைகளின் படி, வெள்ளி அன்று  தொழுகை முடிந்ததற்கு பிறகு,  கல் எறிபவர்கள் சி .ஆர்.பி.எப்  மற்றும் ஜம்மு காஷ்மீர்  காவல் துறையின்  மீது கல் வீச  துவங்கியுள்ளனர். ஆனால் பாதுகாப்பு படையினர் எந்த பதிலடியும் கொடுக்கவில்லை.  மாறாக பாதுகாப்பு படையினர், கல்வீச்சில் ஈடுபட்டவர்கள்  ஒன்றிணைந்து அவர்களின் கல் எரியும் போக்கு தீவிரமடைய அனுமதித்துள்ளனர். அதே வேளையில் இந்த கல்வீச்சு கும்பலை   முன்னின்று வழி  நடத்தியாதாக  கண்டுபிடிக்கப்பட்ட இருவரும் அந்த கல் எரியும் கும்பலை மேலும் வேகமாக செயல்பட உந்தியுள்ளனர். இவ்வேளையில் பாதுகாப்பு படையினர் தங்களின் முதல் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அக்கூட்டத்தை கலைக்க முயன்றுள்ளனர்.

இத்தருணத்தில், கல் எரிபவர்களை போல வேடமிட்டிருந்த இரண்டு காவலாளிகள் அக்கூட்டத்தினை தலைமையேற்று  நடத்திய இரண்டு முக்கிய ஜிகாதிகளை பின்னின்று பிடித்தனர். செய்திகளின்  படி அந்த இரண்டு பாதுகாப்பு பணியாளர்களும் கையில் போலி துப்பாக்கிகளை வைத்து மற்றவர்களை அச்சுறுத்தி அவ்விரு ஜிகாதிகளையும்  போலீஸ் வாகனம் வரையில்  அழைத்து வந்துள்ளனர். இந்த புதிய யுத்தியின் மூலம் ஆச்சரியத்திலும் குழப்பத்திலும் ஆழ்ந்த அந்த கும்பல் அப்பட்டமாக கலைந்து  சென்றுள்ளனர், அதனை தொடர்ந்து கல் வீச்சும் பாதியிலே முடிந்து போனது. தரவுகளின் படி இதே போன்ற உத்தி 2010 யிலும் கடைப்பிடிக்க பட்டது. அப்போது  பல காவல் அதிகாரிகள் சாதாரண உடையுடுத்தி கல் எரியும் கூட்டத்துடன் கலந்திருந்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது  செய்தது குறிப்பிடத்தக்கது .

இந்த யுத்தி, ஜெருசலேம் மற்றும் காசா வில் "ஹமாஸ்ஆ" தரவின் கீழ் கல்வீச்சில் ஈடுபட்டவர்களை  கையாளும்  வேளையில்  இஸ்ரேலி பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட யுத்தியாகும்.   இஸ்ரேலின் ஐடிஎப் பணியாளர்களில் அரபி மொழி நன்கு அறிந்தவர்கள் கல் எறிபவர்களை போல வேடமிட்டு முக்கிய  தீவிரவாதிகளை பிடித்தனர். ஐடிஎப் சில சமயங்களில் ஹமாஸ் அமைப்பின் கொடிகளை ஏந்தியும்  மற்றும் முகமூடிகள் அணிந்தும் கும்பலுடன் கலந்திருந்தனர். செய்திகளின் படி,  கும்பலுள்  ஒழிந்திருக்கும்  அரபி மொழி பேசும் இஸ்ரேலிய இராணுவ வீரர்களை "முஸ்தரபீன்" என ஹமாஸ் ஆதரவில் இயங்கும் தீவிரவாதிகள் அழைப்பது வழக்கம்.  இது போன்ற "முஸ்தரபீன்"கள் இஸ்ரேல் இராணுவத்தின் இரகசிய பணியாளர்களாக இருப்பதும், ஹமாஸ் தீவிரவாதிகளின்  தொடர்பு  வளையத்திற்குள் ஊடுருவ அவர்களை   போலவே பேசவும் நடந்து கொள்ளவும்  இவர்களுக்கு தீவிர  பயிற்சிகள் நடத்தப்படுகின்றன  என சில ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீரின் சுற்றுப்பகுதியிலும் ஜிகாதி கூட்டங்கள் பாதுகாப்பு படையினர் மீது கல் எரிந்து தாக்குதல் நடத்துவது  வாடிக்கையாகி  விட்டது. பெரும்பாலும் இந்த கல்லெரி தாக்குதல் வெள்ளிக்கிழமை தோறும் மசூதியில் நிகழும்  தொழுகைக்கு பின்னேயே நடத்தப்படுகின்றன. இந்த தாக்குதலில் ஈடுபடும் கும்பல்களின் நடுவே பாகிஸ்தான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ்  கொடிகள் அசைக்கப்படும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. சமீபத்தில் கல் எரியும் ஜிஹாதி ஒருவர் சி.ஆர்.பி.எப் வாகனத்தை தாண்டி ஓடியதும் அச்சமயத்தில் சி.ஆர்.பி.எப் கான்வாய் வன்முறை மிகுந்த கல்வீச்சு கும்பலால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது கவனிக்கத்தக்கது . நூற்றுக்கணக்கான சி.ஆர்.பி.எப் வீரர்கள் மற்றும் ஜம்மு&காஷ்மீர் காவலர்கள் இவர்களை போன்ற கல்வீச்சு கும்பலால்  ஆண்டும் தோறும் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். எனவே தற்போது சி.ஆர்.பி.எப் - பும் தங்களின் பணியாளர்களை இது போன்ற கல் ஏரி தாக்குதலில் இருந்து காப்பதற்காக இந்த இஸ்ரேல்  முறையையே   கையாளத்துவங்கி விட்டதாய் அறிக்கைகள் கூறுகின்றன.


Next Story