Top
undefined
Begin typing your search above and press return to search.

9 மாத காலத்தில் தமிழக அரசுக்கு ₹26,227 கோடி : 22% அதிக வருமானம் பெற்று ஜி.எஸ்.டி வசூலில் இரண்டாம் இடத்தில் தமிழகம்

9 மாத காலத்தில் தமிழக அரசுக்கு ₹26,227 கோடி : 22% அதிக வருமானம் பெற்று ஜி.எஸ்.டி வசூலில் இரண்டாம் இடத்தில் தமிழகம்

SG SuryahBy : SG Suryah

  |  12 Sep 2018 6:05 AM GMT

ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பின் கடந்த 2017 ஜூலை மாதம் முதல் கடந்த மார்ச் மாதம் வரையிலான 9 மாத காலத்தில் மாநில அரசுக்கு ₹26,227 கோடியும், மத்திய அரசுக்கு ₹24,745 கோடியும் என மொத்தத்தில் ₹50,972 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. மேலும் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ₹9,458 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. அந்த வகையில் மொத்தம் ₹60,430 கோடி வருவாய் கிடைத்து இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஏற்றுமதியாளர்களின் 5,157 விண்ணப்பங்களுக்கு ₹2,620 கோடி திருப்புத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, சரக்கு மற்றும் சேவை வரி வசூலில் நாட்டிலேயே தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் இந்த ஆண்டு ஜனவரி 31 வரை ஜி.எஸ்.டி வரி வசூல் ₹23,317.76 கோடி வசூலாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையில் ஜி.எஸ்.டி. மூலம் ₹19,355.19 கோடி வசூலிக்கப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதை விட ஜி.எஸ்.டி. குறைந்தால், அதனை மத்திய அரசு ஈடுகட்டும் என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட ₹19,592.58 கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது. இதன் மூலம் கூடுதலாக ₹237 கோடி கிடைத்து இருக்கிறது.
தற்போது ஜி.எஸ்.டி. மூலம் மாதம் ரூ.3 ஆயிரத்து ₹222 கோடி வசூலாக வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 818 தொழில் முனைவோர்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வந்துள்ளனர். தொடர்ந்து பலர் ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்து வருகின்றனர். ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டபோது தமிழக அரசுக்கு வரி வருவாயில் இழப்பு ஏற்படும் என்ற தோற்றம் இருந்தது.
ஏனெனில், தமிழகத்தில் உற்பத்தி- தயாரிக்கப்படும் பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும்போது, அந்த மாநிலங்களுக்கு வரி வருவாய் சென்றடைந்துவிடும் என்று கருதப்பட்டது. தற்போது பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு அதிகளவில் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருவதால், ஜி.எஸ்.டி. மூலம் கூடுதல் வரி வருவாய் கிடைத்து இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலமாக தமிழகம் உற்பத்தி மாநிலம் மட்டும் அல்ல, அதிக நுகர்வை கொண்ட மாநிலமும் கூட என்பது நிரூபணமாகியுள்ளது.
Next Story