Top
undefined
Begin typing your search above and press return to search.

"தி.மு.க-வினர் உங்கள் கடைகளிலும் தாக்குதல் நடத்தலாம். ஆகவே... இன்றே கண்காணிப்பு கேமரா பொருத்தி பயன்பெறுவீர்" தி.மு.க-வின் அடாவடிதனத்தை வணிகமாக்கும் நிறுவனங்கள்!

தி.மு.க-வினர் உங்கள் கடைகளிலும் தாக்குதல் நடத்தலாம். ஆகவே... இன்றே கண்காணிப்பு கேமரா பொருத்தி பயன்பெறுவீர் தி.மு.க-வின் அடாவடிதனத்தை வணிகமாக்கும் நிறுவனங்கள்!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  15 Sep 2018 12:03 PM GMT

கடந்த ஒரு மாதமாக தி.மு.க-வினர் பொது இடங்களில் செய்து வரும் அடாவடித்தனங்கள் தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மு.க.ஸ்டாலின் தி.மு.க தலைவராக பதியேற்ற அன்று(28.08.2018) சென்னை ஓட்டல் ஒன்றில் பிரியாணி இலவசமாக வழங்கவில்லை என தனது ஆதரவாளர்களுடன் சென்று தாக்குதலில் ஈடுபட்டார் தி.மு.க. பிரமுகர் யுவராஜ் என்பவர். இந்த சம்பவம் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி பின்னர் வெளியாகி தி.மு.க-வினருக்கு தர்மசங்கடத்தை அளித்தது.
அதற்கு அடுத்த நாளே(ஆகஸ்ட் 29) கன்னியாக்குமரியில் சுதா அமர்சிங் என்கின்ற தி.மு.க.வின் வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் நாகர்கோயில் அருகே  உள்ள மருங்கூரில் ஒரு ஓட்டலில் பரோட்டா சாப்பிட்டு முடித்து அவரிடம் பில் தரப்பட்டபோது பணம் தராமல், தி.மு.க பிரமுகர் சுதா அமர்சிங் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காண்பித்து ஓட்டல் ஊழியர்களை மிரட்டி, ஓட்டலில் இருந்த பொருட்களையும் அரிவாளால் சேதப்படுத்தினார். இவரது அதிரடி நடவடிக்கையால் பயந்து போன வாடிக்கையாளர்கள் ஓட்டலை விட்டு அலறியடித்து ஓடினர். இதையடுத்து ஓட்டலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பின்னர்
வெளியாகி தி.மு.க-வுக்கு மேலும் ஒரு அவப்பெயரை கொடுத்தது
.
இரண்டு நாட்களுக்கு முன்(செப்டம்பர் 13) பியூட்டி பார்லரில் புகுந்து பெண்ணை சரமாரியாக தாக்கும் தி.மு.க முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைரல் வீடியோ என்ற தலைப்பில் புதிய தலைமுறை தொலைகாட்சி ஒரு காணொளியை வெளியிட்டது. இந்த தி.மு.க நிர்வாகியும் சிசிடிவி கேமரா மூலமாக மாட்டி தற்போது சிறையில் உள்ளார்.
இதையடுத்து இன்று(செப்டம்பர் 15) ஓசி பஜ்ஜி கேட்டு ரோட்டு கடைக்காரரை தி.மு.க-வினர் தாக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி ஆக மொத்தம் தமிழக மக்கள் தி.மு.க-வின் மீது அச்சத்தில் வாயடைத்து உள்ளனர்.
ஆனால் இந்த வாய்ப்பை செப்பனே பயன்படுத்திய பெரம்பலூரை சேர்ந்த வியோன் செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் ஒரு விளம்பரத்தை செய்துள்ளது. அதில் "திமுகவினர் உங்கள் கடைகளிலும் தாக்குதல் நடத்தலாம். ஆகவே... இன்றே கண்காணிப்பு கேமரா பொருத்தி பயன்பெறுவீர். தொடர்புக்கு : 9**********" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
https://www.facebook.com/VeyonSolutions/posts/1121054791402898?__tn__=-R
இந்த பதிவை பார்த்து கொதிப்படைந்த ஜெயசங்கர் என்ற தி.மு.க உடன்பிறப்பு தி.மு.க-வுக்கே உரித்தான பாணியில் இந்த நிறுவனத்தை பொதுவெளியில் மிரட்டினார். அவர் விடுத்த மிரட்டலில் "பகிங்கர மன்னிப்பு கேட்கலைன்னா கோர்ட் கேஸ்ன்னு அலைய வேண்டி இருக்கும்... எப்படி வசதி?" என்று எழுதப்பட்டு இருந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவனத்தினர் தங்களது பதிவை திருத்தி "உங்கள் கடைகளிலும் தாக்குதல் நடத்த படலாம் ஆகவே... இன்றே கண்காணிப்பு கேமரா பொருத்தி பயன்பெறுவீர். தொடர்புக்கு : 9**********" என்ற மாற்றி விட்டனர். இந்த மாற்றம் அவர்களது முகநூல் பக்கத்தில் தற்போதும் காண முடிகிறது.

கருத்து சுதந்திரத்தை பற்றி வகுப்பெடுக்கும் ஸ்டாலினும், கனிமொழியும் தி.மு.க-வின் லட்சணம் இது தான என்பதை விளக்க வேண்டும். தி.மு.க-வினரின் தொடர் அடாவடித்தனத்தால் புதிதாக பொறுப்பேற்றுள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடும்கோபத்தில் உள்ளதாக தி.மு.க வட்டாரம் தெரிவிக்கின்றது.
Next Story