Top
undefined
Begin typing your search above and press return to search.

அடுத்த டார்கெட் பெட்ரோல் பங்க்! பிரியாணி கடை, செல்போன் கடை, பியூட்டி பார்லர், பஜ்ஜி கடை என தொடரும் தி.மு.க-வின் வன்முறை வெறியாட்டம்! #ஓசிபெட்ரோல்திமுக என கலாய்க்கும் நெட்டிசன்கள்

அடுத்த டார்கெட் பெட்ரோல் பங்க்! பிரியாணி கடை, செல்போன் கடை, பியூட்டி பார்லர், பஜ்ஜி கடை என தொடரும் தி.மு.க-வின் வன்முறை வெறியாட்டம்! #ஓசிபெட்ரோல்திமுக என கலாய்க்கும் நெட்டிசன்கள்

SG SuryahBy : SG Suryah

  |  17 Sep 2018 4:50 PM GMT


செப்டம்பர் 15-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க-வின் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் தி.மு.க தலைவர் முக.ஸ்டாலின், பொன்முடி உள்ளிட்ட தி.மு.க-வினர் கலந்துக் கொண்டனர்.



இந்நிலையில், தி.மு.க பிரமுகர் கவி மோசஸ் தன்னுடைய இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி,  அவர்களிடம் சண்டையிட்ட சிசிடிவி வீடியோ காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தி.மு.க-வினர் பிரியாணி கடை, செல்போன் கடை, பியூட்டி பார்லர், பஜ்ஜி கடை என பிரச்சனைகள் செய்து ஓசியில் பொருட்களை வழங்குமாறு சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில்  தற்போது பெட்ரோல் பங்கிலும் தி.மு.க-வினர் தங்களது ரவுடித்தனத்தை காண்பித்துள்ளது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்த செய்தியி மற்றும் வீடியா காட்சிகளை ஏசியாநெட் தமிழ் இணையதளம் வெளியிட்டுள்ளது.

Next Story