Top
undefined
Begin typing your search above and press return to search.

மாவட்ட மற்றும் சார்நிலை நீதிமன்ற வளாகங்கள் இணையத்தளம் மூலம் இணைப்பு !

மாவட்ட மற்றும் சார்நிலை நீதிமன்ற வளாகங்கள் இணையத்தளம் மூலம் இணைப்பு !

SG SuryahBy : SG Suryah

  |  19 Sep 2018 3:53 AM GMT

நாடெங்கும் உள்ள மாவட்ட மற்றும் சார்நிலை நீதிமன்ற வளாகங்கள் அனைத்தையும் இணையதள அகன்ற வலைப்பின்னல் மூலம் இணைப்பது, மின்னணு நீதிமன்ற இயக்க திட்டத்தின் 2-வது கட்டத்தில் (2015-2019) முக்கியமான பகுதியாக அமைந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் மின்னணு குழு வழிகாட்டுதலின் கீழ் மின்னணு நீதிமன்றங்கள் கூட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. நாட்டின் 16,089 மாவட்ட மற்றும் சார்நிலை நீதிமன்றங்கள் கணிமயமாக்கப்பட்டுள்ளன. இவற்றில் தகவல் மென்பொருள்கள் மற்றும் வன்பொருள்கள் உள்பகுதி கட்டமைப்பு ஆகியன ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து நீதித்துறை தகவல் தொடர்பு தொழில்நுட்ப வசதி பெற்றதாக மாறியுள்ளது. நீதி பரிபாலன அமைப்பில் இதனால் திறன் மேம்பட்டு வெளிப்படைத்தன்மை மிகுந்த செயல்பாடு உருவாகி உள்ளது.
 

ரூ.167 கோடி மதிப்பிலான பெருமைமிகு மின்னணு நீதிமன்றங்கள் வேன் திட்டப் பணிகளை மத்திய நீதித்துறை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளது. இந்த திட்டத்தில் 2992 மாவட்ட மற்றும் சார்நிலை நீதிமன்ற வளாகங்களில் வேன் கட்டமைப்பு உருவாக்கப்படும். இதில் எந்தவிதமான இணைப்புகளும் அற்ற 547 நீதிமன்ற வளாகங்களும் அடங்கும். இந்தியா முழுவதிலும் வேன் திட்ட முன்னேற்றத்தை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கால இலக்குகளுடன் இணைத்து கண்காணிப்பதற்காக ஆன்-லைன் கண்காணிப்பு அமைப்பு ஒன்றை தேசிய தகவலியல் மையம் நேற்று (2018 செப்டம்பர் 7-ந் தேதி) தொடங்கி உள்ளது.
மின்னணு நீதிமன்றங்கள் திட்டத்தின் கீழ் 458 இணைப்புகள் ஏதுமற்ற மாவட்ட மற்றும் துணை நீதிமன்றம் குறித்த சாத்தியக் கூறு ஆய்வுகளை பிஎஸ்என்எல் நிறுவனம் நிறைவு செய்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கான தெளிவான படிகள், இலக்குகள், காலவரையறை, முடிக்க வேண்டிய பணி ஆகியவற்றை கொண்ட முறையான கண்காணிப்பு நடவடிக்கைகளை நீதித்துறை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டம் 2018 டிசம்பர் 31-ந் தேதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Next Story