Top
undefined
Begin typing your search above and press return to search.

அங்கன்வாடி ஊழியர்களின் மதிப்பூதியத்தை உயர்த்த மத்திய அமைச்சகம் முடிவு! பிரதமர் மோடியால் பல நாள் கனவு நினைவேறியுள்ளது!

அங்கன்வாடி ஊழியர்களின் மதிப்பூதியத்தை உயர்த்த மத்திய அமைச்சகம் முடிவு! பிரதமர் மோடியால் பல நாள் கனவு நினைவேறியுள்ளது!

SG SuryahBy : SG Suryah

  |  20 Sep 2018 4:04 AM GMT

அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கான மதிப்பூதியத்தை அதிகரிக்கவும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு செயல்திறனுக்கு ஏற்ற ஊக்கத்தொகையை அளிக்கவும்(ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின் கீழ்) பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 01.10.2018 முதல் 31.03.2020 வரை இதனை செயல்படுத்த தேவையான மொத்த செலவு ₹10,649.41 கோடியாகும் (மத்திய அரசின் பங்கு).
இந்த ஒப்புதல் மூலம் சுமார் 27 லட்ச அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் பயன்பெறுவர். 
திருத்தப்பட்ட புதிய தொகைக்கு கீழ்கண்டவற்றிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது:























நிர்வாகிகள்தற்போது கொடுக்கப்பட்டு வரும் தொகை (மாதத்திற்கு)திருத்தப்பட்ட புதிய தொகை (மாதத்திற்கு)
அங்கன்வாடி பணியாளர்கள்₹3,000/-₹4,500/-
சிறிய அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள்₹2,250/-₹3,500/-
அங்கன்வாடி உதவியாளர்கள்₹1,500/-₹2,250/- (*)

(*) அங்கன்வாடி மையங்களின் செயல்பாட்டை மேம்படுத்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு இதனுடன் சேர்த்து திறனுக்கேற்ற ₹250/- ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
இந்த ஒப்புதல் அக்டோபர் 1, 2018-ல் இருந்து செயல்பாட்டிற்கு வரும். 
நிதி செலவீடுகள்: 
01.10.2018 முதல் 31.03.2020 வரை இதனை செயல்படுத்துவதற்கான செலவினங்கள் கீழ்வருமாறு

(ரூபாய் கோடியில்)



































பங்கீடுகள்18-19(6 மாதம்)19-20மொத்தம்
அங்கன்வாடி பணியாளர்களுக்கான மதிப்பூதியம்2182.634365.276547.90
சிறய அங்கன்வாடிகளில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்களுக்கான மதிப்பூதியம்154.60309.19463.79
அங்கன்வாடி உதவியாளர்களுக்கான மதிப்பூதியம்1212.572425.153637.72
மொத்தம்3549.87099.6110649.41
Next Story