Top
undefined
Begin typing your search above and press return to search.

நாடெங்கும் “தூய்மை சேவை” பணிகள் தொடக்கம் !

நாடெங்கும் “தூய்மை சேவை” பணிகள் தொடக்கம் !

SG SuryahBy : SG Suryah

  |  20 Sep 2018 3:54 AM GMT

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில், 2018 செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2 வரை, “தூய்மையே சேவை” பிரச்சார இயக்கத்தை மேற்கொள்ள மத்திய சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நாட்களில், மத்திய சுற்றுலாத் துறையின் மண்டல அலுவலகங்கள் மூலம், உள்ளூர் மக்கள், சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், மாநில அரசுகள் மற்றும் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரின் பங்களிப்புடன், தூய்மை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைகள், நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற நினைவுச் சின்னங்கள் உள்ளிட்ட 47 சுற்றுலாத் தலங்களில், “தூய்மையே சேவை” இயக்கம் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில், 2018 செப்டம்பர் 15 அன்று மாமல்லபுரம், கடற்கரை கோயில் மற்றும் கடற்கரை பகுதியில், இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சென்னை கிளை மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள இந்திய உணவக மேலாண்மை கல்லூரி மாணவர்களால் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சுற்றுலாத் தலங்களையொட்டி கடை நடத்தும் உள்ளூர் வியாபாரிகளிடமும் தூய்மையை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்தப் பணிகள் தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது. 
2018 செப்டம்பர் 16 அன்று சென்னை பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில் மற்றும் வேளாங்கண்ணி தேவாலயத்தின் பின்புறம் உள்ள எலியட்ஸ் கடற்கரை பகுதியில் இந்திய சுற்றுலாத் துறை மற்றும் சென்னை உணவக மேலாண்மை கல்லூரி மாணவர்கள் இணைந்து தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்
Next Story