Top
undefined
Begin typing your search above and press return to search.

பேன்ஸி ஸ்டோர் உரிமையாளரை கொடூரமாக தாக்கி, செருப்பால் அடித்து தற்கொலைக்கு தள்ளிய தி.மு.க குண்டர்கள்; கட்டுக்கடங்காத தி.மு.க-வின் வன்முறை வெறியாட்டத்தால் சிக்கி சின்னாபின்னமாகும் தமிழகம்!

பேன்ஸி ஸ்டோர் உரிமையாளரை கொடூரமாக தாக்கி, செருப்பால் அடித்து தற்கொலைக்கு தள்ளிய தி.மு.க குண்டர்கள்; கட்டுக்கடங்காத தி.மு.க-வின் வன்முறை வெறியாட்டத்தால் சிக்கி சின்னாபின்னமாகும் தமிழகம்!

SG SuryahBy : SG Suryah

  |  21 Sep 2018 5:47 AM GMT

திருவண்ணாமலை அருகே தி.மு.க குண்டர்கள் பேன்ஸி ஸ்டோர் உரிமையாளரை கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகளை News 7 தொலைகாட்சி இன்று காலை வெளியிட்டுள்ளது.
தானிப்பாடியில் பேன்ஸி ஸ்டோர் நடத்தி வரும் ராஜேஷை, தி.மு.க-வை சேர்ந்த பூபாலன், பவுன்குமார் ஆகியோர் பணம் கேட்டு மிரட்டியதுடன், செருப்பால் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இந்த கொடூர காட்சிகள் அங்கே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது வெளியாகியுள்ளது.
https://www.youtube.com/watch?v=EsJZlLvH6GE
தி.மு.கவினரின் வன்முறை வெறியாட்ட தாக்குதலால் மனமுடைந்த ராஜேஷ் அவமானம் தாங்க முடியாமல் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளதாக இது தொடர்பான News 7 செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராஜேஷ்-க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக தனிப்பாடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக தி.மு.க-வினர் பொது இடங்களில் ஈடுபடும் வன்முறை வெறியாட்டங்கள் கட்டுக்கடங்காமல் போவதும், அதனால் தமிழக மக்கள் அதிர்ச்சியில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story