Top
undefined
Begin typing your search above and press return to search.

பிரகார் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது !

பிரகார் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது !

SG SuryahBy : SG Suryah

  |  21 Sep 2018 4:02 AM GMT

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தரையில் ஒரு இலக்கிலிருந்து மற்றொரு இலக்கை தாக்கக் கூடிய பிரகார் ஏவுகணை இன்று பாலசோரில் உள்ள நடுத்தர தொலைவு சோதனைத் தளத்தின் 3-வது ஏவு தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் செலுத்திய இந்த ஏவுகணையை தள நிலையங்களும், மின்சார ஒளிஇழை அமைப்புகளும் கண்காணித்தன. இந்த பிரகார் ஏவுகணை அதிநவீன ஆயுத அமைப்பு ஆகும். இது பலவகையான குண்டுகளை தாங்கிச் செல்லும் திறன் கொண்டது. பல இலக்குகளை அழிக்கும் ஆற்றல் கொண்டது.
இந்த ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய பாதுகாப்பு, ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், ராணுவம், தொழில் துறையினர் மற்றும் இதர குழு உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் பாராட்டுத் தெரிவித்தார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரகார் ஏவுகணை நமது பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்தும் என்று அமைச்சர் கூறினார்.
ராணுவ தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுத்துறை செயலாளரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன தலைவருமான டாக்டர் ஜி.சத்தீஷ் ரெட்டி, ஏவுகணை வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை பார்வையிட்டு குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.
Next Story