Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆற்று மணல் முறைகேடுகளை தடுக்க மணலை ஆன்லைன் மற்றும் கைபேசி செயலி மூலம் விற்கும் திட்டத்தை துவக்கிய முதல்வர் எடப்பாடியார்!

ஆற்று மணல் முறைகேடுகளை தடுக்க மணலை ஆன்லைன் மற்றும் கைபேசி செயலி மூலம் விற்கும் திட்டத்தை துவக்கிய முதல்வர் எடப்பாடியார்!

SG SuryahBy : SG Suryah

  |  24 Sep 2018 7:14 AM GMT

"ஆறுகளில் ஏகத்துக்கும் விதிமுறைகளை மீறி மணல் கொள்ளை நடக்கின்றது" என வந்த புகாரை தொடர்ந்து,  கடந்த வருடம் ஜூலை மாதம் தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளை மூட உத்தரவிட்டதோடு, "விரைவில் மணல் குவாரிகளை அரசே நடத்தும். முறைகேடுகளைத் தடுக்க ஆன்லைன் மூலம் மணல் விற்பனை செய்யப்படும்" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, தற்போது ஆன்லைன் மூலம் மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு மணல் இணைய சேவை தளத்தில் செப்டம்பர் 22 மாலை 4 மணி முதல் தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்தவதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த மணலை www.tnsand.in இணையதளத்திலும், கைபேசி செயலி மூலமாகவும் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 11 ஆயிரம் யூனிட்டுகள் மணல் மட்டுமே வழங்கப்பட உள்ளதாகவும், முதலில் பதிவு செய்வோருக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பதிவு செய்பவர்களுக்கு அடுத்த வாரத்திலிருந்து மணல் வழங்கப்படும் என்றும், www.tnsand.in-ல் பதிவு செய்யாத வாகனகங்ளுக்கும் மணல் வழங்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, சுமார் 4.5 மெட்ரிக் டன் எடை கொண்ட ஒரு யூனிட் மணலின் விலை ₹9,990-க்கு விற்பனை செய்யப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 2 யூனிட் மணல் ₹19,980-க்கும், 3 யூனிட் மணல் ₹29,970-க்கும், 4 யூனிட் மணல் ₹39,960-க்கும், 5 யூனிட் மணல் ₹49,950-க்கும் விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Next Story