Top
undefined
Begin typing your search above and press return to search.

“மண்டியிட்டு மன்னிப்பு கேள்” - இசைஞானி இளையராஜாவை துரத்தும் மதவெறி கிருஸ்தவ அமைப்புகள்

“மண்டியிட்டு மன்னிப்பு கேள்” - இசைஞானி இளையராஜாவை துரத்தும் மதவெறி கிருஸ்தவ அமைப்புகள்

SG SuryahBy : SG Suryah

  |  25 Sep 2018 6:24 PM GMT




இசையமைப்பாளர் இளையராஜா மீது பெங்களூருவைச் சேர்ந்த இந்திய கிறிஸ்துவ புதுப்பித்தல் என்ற அமைப்பு பெங்களூரு 8-வது மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அதில், இசை அமைப்பாளர் இளையராஜா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசும் போது கிறிஸ்தவர்களின் புனித நூலான வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை கடுமையாக விமர்சனம் செய்தார் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு கோடிக்கணக்காக கிறிஸ்தவர்கள் நம்பும் இயேசுவின் இரண்டாம் வருகை (உயிர்த்தெழுதல்) குறித்தும் விமர்சனம் செய்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இளையராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம். மனுமீதான விசாரணை அடுத்த மாதம் 9ந் தேதி நடக்கும் என்று அறிவித்தது.



50 ஆண்டுகாலமாக தமிழகத்தில், இந்து தெய்வங்களின் சிலையை உடைப்பது, இந்து தெய்வங்களின் படங்களை எறிப்பது, அர்ச்சகர்களை தாக்குவது, பூணுலை அறுப்பது போன்ற பயங்கரவாத செயல்களை இந்து விரோத திராவிட இயக்கங்கள் செய்து வருகின்றன. இதையெல்லாம் மாநில அரசு, மத்திய அரசு மற்றும் காவல்துறை ஆகியவை வேடிக்கை மட்டுமே பார்த்து வருகின்றன. ஆனால், இசைஞானி இளையராஜா அவர்கள் தன்னுடைய சிறிய சந்தேகத்தை பதிவு செய்ததற்கு அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது, கருத்து சுதந்திரத்தை காற்றில் பறக்க விடும் செயலாக இருப்பதாக பொது மக்கள் கருதுகின்றனர். கருத்து சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசும் திராவிட இயக்கங்களும் தமிழக ஊடகங்களும் இந்த விஷயத்தில் மூச்சை கூட விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




Next Story